Friday, March 23, 2018

திருமந்திரம் 51-112

    திருமந்திரம்  பாயிரம்  51 -112


Thursday, March 10, 2016

திருமந்திரம்

திருமந்திரம்
பாயிரம் 
1-50

Sunday, October 3, 2010

கந்தபுராணம்: சூரபன்மன் வதைப்படலம்

கந்தபுராணம்
திருச்சிற்றம்பலம்

விநாயகர் வணக்கம்

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்பதம் போற்றுவாம்.

சுப்பிரமணியக் கடவுள் வணக்கம்

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோளஅ போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

நூற்பயன்


இந்திரர் ஆகிப் பார்மேல் இன்பமுற் றினிது மேவிச்
சிந்தையில் நிநைந்த முற்றிச் சிவகதி அதனிற் சேர்வர்
அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேற்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே.

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்,


சிவமயம்
திருக்கச்சியேகம்பம்
திருச்சிற்றம்பலம்

நான்காவது------------யுத்தகாண்டம்

சூரபன்மன் வதைப்படலம்
1
கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிரகோடி
ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன்
மற்றென் ஆட்சியாம் அண்தங்கள் எங்கணும் வைகிச்
சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான்

2
சொன்ன காலையில் நன்றென வணங்கியே தூதர்
பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து
பொன்னின் மேதரும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து
மனனர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார்.

3
வகுத்த காலையில் ஆண்டுறை அவுண மன்னவர்கள்
தொகுத்த நார்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி
மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும்மேனாள்
பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார்.

4
முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ் சேனை
வந்து வந்திவட் செறிவன விதியொடும் மாறாய்ச்
சுந்த ரங்கெழு மாயனிவ் வுலகுயிர் துய்ப்ப
உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப

5
பூதம் யாவையும் உயிர்களும் புவனம் உள்ளனவும்
பேதம் நீங்கிய சுருதி ஆகமங்களும் பிறவும்
ஆதி காலத்தில் அநாதியாம் எம்பிரான் அளப்பில்
பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின்.

6
இநைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்
வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங்
கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்
அனிலன் தானும் மெய்வியர்த்தநன் நெறுக்கமுற்றயர்வான்.

7
ஆர்த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய அவுணர்
கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனம்
தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்
பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த

8
கூடும் இப்பெரிந் தானையை நோக்கிமெய் குலைவுற்று
ஓடுதற் கிடமின்றி நின்றிரங்கினர் உம்பர்
வீடினான் என வாசவன் மருண்டனன் விதியும்
நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார்.

9
பூதலந் தனில்அம்பர நெறிதனில் புடைசூழ்
மாதி ரங்களில் அளக்கரில் வரைகளின் வழியில்
பாத லங்களில் பிரவினில் அவுணர்தம் படைகள்
ஏதும் வெள்ளிடை யின்றியே சென்றன ஈம்டி

10.
மலரயன் பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்
உலகம் வாசவன் தொல்நகர் ஏனையோர் உறையுள்
அலரி ஆதியர் செல்கதி பிலங்களில் அனிகம்
பலவும் நின்றன செல்லிடம் பெறாத பான்மையினால்11.
மாறி லாதன தொல்லை அண்டங்களின் வந்த
ஈறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை
நூறு கோடி யோசனைகள் என்றறிஞர்கள் நுவன்ரார்
வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார்.

12
குறுமையாம் உயிர்வாழ்க்கையர் கொண்டதொல்வளம்போல்
சிறுமையோ இது விரித்திட அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற்கு உவமையும் ஒன்றிலை பேசின்

13.
அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு அமைத்து
நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும்
மஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும்
பஞ்சு பட்டிட நடந்திடுஞ் தூசி முற்படையே


14.
அந்தம் இன்றியே அகன்புவி கொண்ட அண்டத்தில்
வந்திடும் திறல் படைகளின் பெருமையார் வகுப்பார்
முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி
இந்த அண்டத்தின் இடமெல்லாம் நிறைந்தன இமைப்பில்.

15
ஆன காலையில் ஒற்றர் போய்ச் சூரனையடைந்து
பானல் மெல்லடி கைதொழுது ஐயநீ படைத்த
சேனை வந்து அயல் நின்றன தூசிமுன் சென்று
வானு லாவுபேர் அண்டத்தை நெருங்கின மன்னோ,

16
என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன் எழுந்து
தன்ன தாகிய உறையுள்போய்த் தடம்புனல் ஆடித்
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்து
அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல்அதுவே

17.
நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிறை விரை களபச்
சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான்
மாறில் பொன்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி
வேறுவேறு நன்கினியன புனைந்தனன் விரைவில்

18
ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும்
ஆசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங்
கேச ரித்திறல் யானமுங் கேடில் பொற் தேரும்
பாச நத்திறல் அவுணர் கொண டேகுவான் பணித்தான்

19
ஆங்கழ் வெல்லையில் சூரபன்மா எனும் அவுணன்
பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா
ஓங்கும் ஓர்தடந் தேரினைக் கொணர் திரென் றுரநப்ப
பூங்கழல் துணை வணங்கியே நன்றெனப் போனார்

20
வாட்டு கேசரி எழுபதினாயிரம் வயமாக்
கூட்டம் அங்கணேர் எழுபதினாயிரங் கூளி
ஈட்டம் ஆகியது எழுபதினாயிரம் ஈர்ப்பப்
பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர்.

21
மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது மருங்கில்
தெண்திரைக் கடலாம் என ஆர்ப்பது செறிந்த
அண்டம் ஆயிர கோடியுந் தன்னிடத் தாற்றிக்
கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடுத்தேர்


22


முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும் முத்திக்
கடிது செல்வது சென்றிடு விசையினால் சுகுபத்
தடநெ டுங்கிரி அலமரத் கபனரும் குளிர
வடவை அங்கிகள் விளித்திடப் புரிவதம் மான்தேர்,

23.
ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ்
சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்
கேழ் இல் பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்
ஆழி தாங்கிய அண்டம்ஒத் திலங்கிய தகன்தேர்.

24.
தொழுதகுந் திறல் அவுணர்கோன் வேள்வியில் அஞ்சி
எழுவ வதாகிய எல்லையில் தோன்றியது எதிர்ந்தார்
குழு இரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்
அழியும் நாளிலும் அழிந்திடா திருப்பதவ் அகன்தேர்.

25
கண் அகல்படை அளப்பில பரித்தது காமர்
விண்ணவர்க்குள வலியெலாங் கொண்டது மேல்நாள்
அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனையது
எண்ணில் மேற்படும் யாணர்பெற் றுடையதவ் இரதம்

26
அனையதாகிய தேரினை வஸவர் கொண்டணைந்து
தினகரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத்
துணைய மற்றதில் ிவர்ந்தனன் இவர்தலும் தொழுது
புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார்.

27
பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதில் புக்குக்
இழிந்த சீர்த்தியான்ஆணையால் தேரினைக் கடவத்
தழிந்தழீம் எனப் பல்லியம் இயம்பின சகங்கள்
அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார்


28.
அங்கியன்னபொற் படியகம் கோடிகம் அடைப்பை
திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர்
துங்கம் மிக்கவெண் சீர்த்தியும் ஆளையும் தொடர்ந்து
மங்கலம் திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல்

29
அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த
எண்ணில் மாப்பெருஞ் சிகரியிந் வாயில்கள் இகந்தே
கண்ணகல் ஞெள்ளல் ஆயிர கோடியுங் கடந்து
வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான்.

வேறு

30.
தானவர் கோமகன் தடம்பொற் தேரொடு
மாநகர் முதல்கடை வாயில் போதலும்
ஆனது நோக்கியே அங்கண் சூழ்தரு
சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே.

31
ஞெலித்திடு பரவையில் நீல வெவ்விடம்
ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள்
கலித்தன படர்ந்தன கண்அகல் புவி
சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால்

32.
தேர் இயம்பரிய தோர் நிசாளம் சல்லிகை
பேர் இயம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை
தூரியம் காகளம் துடி முதல்படு
சீர்இயம் பலவுடன் இயம்பிச் சென்றவே.33
சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்
பாயின தானையில் படர்ந்த பூழிகள்
வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப்
போயின நாள்எழு புகைேயைப் போன்றவே.

34.
வானினும் மண்ணினும் மாதிரத்தினும்
தான்நிறை கடலினும் தணப்பின் றாகியே
மேல்நிறை பூழிகள் மிடைய எங்கணுஞ்
சோனைகொள் பின்பனித் தூவல் போன்றதே.

35
சூர் அனி கத்தெழு தூளி அந்நகர்
ஆர்அகில் ஆவியும் யாரும் ஆடிய
பூரிகொல் சுண்ணமும் பொருந்திப் போவது
கார்இனம் மின்னொடு கடல் உண்டேகல்போல்

36.
திணதிறல் கரிகளில் தேரில் வெண்கொடி
மண்டுறு பூழிநோய் வானிற் செல்வன
கொ்டலின் இருதுவில் கொக்கின் மாலைகள்
தண்துளி உறைப்புளிப் படரும் தன்மைபோல்

37
படைவகைதிசை எலாம் படரப் பபாயிருள்
அடைவது சூர்அறிந்து அண்டம் யாவினும்
மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக்
குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே.

38.
வெம்பரி கரி உமிழ் விலாழி மாமதம்
இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால்
உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள்
அம்புவி சென்றிடற்கு அரியது ஆனதே.

39
இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்
தெவ்வலி அவுணற்கோன் செம்பொற் தேரின்மேல்
மைவரை மேருவின் வருவ தாமெனக்
கவ்வையின் அமர்புரி களரி ஏகினான்

40
பூசலின் எல்லையில்புரவலன் செலத்
தூசிய தாகியே தொடர்ந்த தானைகள்
ஈசன தருள்மகன் இனிது வைகிய
பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய்

41
உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென
இரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே
மரற்றுறு பலங்களில் வாரி கண்வர
அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும்

42
அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்
விழுங்குறும் இருவரும் விம்மினார் உளம்
புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்
கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல்

43
ஆவதோர் காலையில் அரியும் நான்முகத்
தேவனும் ஏனைய திசையி நோர்களும்
மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு
பூவடி பணிந்துஇவை புகல்தல் மேயினார்


வேறு
44
அந்தமிலாத அண்டம் ஆயிரத்தெட்டுத் தன்னில்
வந்திடு தானையோடு மாபெருஞ் சூரபன்மன்
உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான்
முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்தது என்றார்

45
என்னலும் முறுவல் செய்தாங்கு இலங்கெழில் தவிசின்வைகும்
பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பில் நோக்க
முன்னம துணர்ந்து வல்லே முளவு கோல் கயிறு பற்றி
பொன் அவிர் மனவேகப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான்

46,
உய்த்துடு கின்ற காலத்து ஒய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத்தாரான் புகர் மழுக் குலிசம் சூலம்
சன்திவான் பலகை நேமி தண்டு எழுசிலை கோல் கைவேல்
கைத்தலங் கொண்டான் என்னில் அவன்தவண் கணிக்கற்பாற்றோ,

47
மாறிலா அருக்கந் நாப்பண் வைகிய பரமனேபோல்
ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவிமான்தேர்
ஏறினான் வீரவாகு இலக்கரோ டெண்ம ராகும்
பாருலாம் குருதிவேலார் பாங்கராய்ப் பரசிவந்தார்

48
இராயிரவெள்ளம் ஆகும் எண்தொொகைப் பூதர்யாரும்
மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி
விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர்யாரும்
பராவொடு புடையில் நின்று பனிமலர் மாரி தூர்த்தார்

49
தூர்த்திடுகின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத்
தீர்த்தன் மான்தேர் மேலாகித் திண்புவி அண்டம் தன்னில்
பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னுறுமுன்னோன் போல
ஆர்த்திடு தானைவெள்ளத் தவுணர்கள் மீது போனான்.

50.
ஆங்கது காலைதன்னில் ஆறிருதடந்தோள் ஐயந்
பாங்குறு பூதர்யாரும் பாரொடு திசையும் வானும்
நீங்குதல்சூழும் நேரலன் படையை நோக்கி
ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனர் இனைய சொற்றார்

51.
தீயனபுரியுஞ் சூரன் செய்திடு தவத்தால் பெற்ற
ஆயிர இருநாள் அண்டத் தவுணரும் போந்தா ரன்றே
ஏயதோர் அண்டம் ஒன்றில் இருந்தனர் இவர் மற்றன்றால்
மாயிரு திசையும் விண்ணும் வையமும் செறிந்து நின்றார்

52.
வரத்தினில் பெரியர் மாயவன்மையில் பெரியர் மொய்ம்பின்
உயரத்தினில் பெரியர் வெம்போர் ஊக்கத்தில் பெரியர் எண்ணில்
சிரத்தினில் பெரியர் சீற்றச் செய்கையில் பெரியர் தாங்கும்
கரத்தினில் பெரியர் யாரும் காலனில் பெரியர் அம்மா.

53
மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்
சோகத்தை விளைந்து வெம்போர் தொடங்கியே தொலைவு செய்தோர்
மோகத்தின் வரம்பாய் நின்றோர் முழுதுயிர்க் கடல் உண்வேட்கை
மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன் ஏர்றிடினும் வெல்வோர் bg


54.
கூற்றெனும் நாமத்தண்ணல் ககொண்டிடும் அரசும் செங்கேழ்
நூற்றிதழ்க் கமலமேலோன் நுனித்தனன் விதிக்குமாறும்
மாற்றிடும் செய்கை வல்லோர் மானிலம் முழுதுண்டாலும்
ஆற்றரும் பசிநோய் மிக்கோர் அண்டங்கள்அலைக்கும் கையோர்

55
வெங்கனல் சொரியும் கண்ணார் விரிகடல் புரைபேழ் வாயார்
பங்கம்இல்வயம்மேல் கொண்டோர் பவத்தினுக்கு உறையுளானோர்
செங்கதிர் மதியம் தோயும் சென்னியர் செயிர்நீர் ஆற்ரல்
அங்கத இறையும் பேர அடிபெயர்த்து உலவும் வெய்யோர்

56
அங்கிமா முகத்தினான்போல் அடைந்தனர் பல்லோர் யாளித்
துங்கமா முகத்தினான் போல் தோன்றினர் பல்லோர் சூழி
வெங்கைமா முகத்தினான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ்
சிங்கமா முகத்தினான் போல் திகழ்ந்தனர்பல்லோர் அன்றே

57
மதுவொடு கைடபன்போல் வந்தனர் பல்லோர் யாருந்
துதியுறு புகழ்ச்சுந்தோப சுந்தரில் செறிந்தோர் பல்லோர்
அதிர்கழல் சலந்தரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற
முதிர்சின மகிடன்போல மொய்த்தனர் பல்லோர் அம்மா,

58.
அரன்படை பரித்தோர் பல்லோர் அம்புயத் தவிசில் மேவும்
வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டம்தாங்கும்
கரன்படை பரித்தோர் பல்லோர்கால்படை பரித்தோர் பல்லோர்
முரன்படை படுத்தகொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோர்

59
ஆனதோர் அவுணவெள்ளம் அநந்தகோடியதாம் என்றே
தான் உரைசெய்வதல்லால் சாற்ற ஓர் அலவும் உண்டோ
வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்கும்
சேனைகள் ஆகிச் சூழின் யாம் என்கொல் செய்வதம்மா

60
ஓர் அண்டத் தவுணர்போரால் உலைத்த யாம் ஒருங்கே எல்லாப்
பேர் அண்டத்தோரும் தாக்கில் பிழைப்புறு பரிசும் உண்டோ
கார்அண்ட அலக்கர் சாடிக் கனவறை எறியும் கால்கள்
ஏரண்டச் சூழல் அவை பின்னும் இருக்கவற்றோ.

61.
ஒருவரே எம்மை யெல்லாம் உரப்பியே துரப்பர் பின்னும்
இருவரே சென்று தாக்கின் யார்இவண்உய்யவல்லார்
துருவரே அனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும்
பொருவரே என்னில் நேர்போய்ப் பூசல் ஆர் தொடங்கற்பாலார்

62
எல்லையில் ஆர்ரல் கொண்ட எம்முடைத் தளைவர் யாரும்
அல்லன வீரர்தாமும் அவுணரை எதிர்க்கல் ஆற்றார்
கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்
ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே.

63
நாற்படை அவுணர் தாக்கில் நாமெல்லாம் விளிதும் வீரர்
கால்படு பூனையே போல் கதுமென இரிவர் வாகைப்
பாற்படு திறலோன் நிற்கில் பழிபடும் இனையரோடும்
வேற்படஐவீரன் அன்றி வேறுயார் எதிர்க்க வல்லார்

64
நீடுறுதிசையும் வானும் நிலனும் வெள்ளிடைய தின்றி
பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்
ஓடியும் உய்யல் ஆகா ஒல்லுமாறு அவரைத்தாக்கி
வீடுதல் உறுதியென்றே விளம்பிமேல் சேறல் உற்றார்,


65.
மற்றதுகாலை தன்னில் மாபெரும் பூதசேனைக்
கொர்றவர் பலரும் ஏனைவீரர்தம் குழுவினோரும்
வெற்றிகொள் மொய்ம்பன் தானும் ம ிடைந்து சூழ்படையை நோக்கி
இற்றந கஒல்லோநந்தம் ழன்மை என்று எண்ணல் உற்றார்

66
அண்டர்கள் முதல்வன்தானும் அமரரும் அகிலம் எங்கும்
தண்டுதல் இன்றிச்சூழும் தானவர் அனிகம் எல்லாம்
கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருள்காரி
வண்துளவு அலங்கல் சென்னி வானவர்க்கு இனையசொள்வான்

67.
ஆண்தகை முருகன்தன்மேல் ஆயிர இருநால் அண்டத்து
ஈண்டிய தானை எல்லாம் இறுத்தன இவற்றினோடும்
மூண்டமர் இயற்றிவெல்ல ஊழிநாள் முடியுமென்றால்
மாண்டிடுகின்றது எங்ஙன் அவுணர்கள் மன்னன் மன்னோ

68
அடுதிறல் வலிபெற்றுள அவுணராம்பானாள்கங்குல்
விடிவதும் ்மரர் தங்கள் வெஞ்சிறை வீடுமாறும்
நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமதுதுன்பம்
முடிவதும் இல்லைகொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான்

69.
இந்திரன் ிநையதன்மை இசைத்தலும் இலங்கை காத்த
சந்திரு சென்னியானை அடுதிறல் கொண்டு நின்ற
செந்திரு மருமத்து அண்ணல் தேவரை அளிக்கும்தொல்லோன்
புந்திகொள் கவலை நாடி இநையன பகலா நின்றான்.

70.
காலமாய்க் காலமின்றி கருமமாய்க் கருமம்ின்றி
கோலமாய்க் கோலம்இன்றி குணங்களாய்க் குணங்கள்இன்றி
ஞாலமாய் ஞாலம்ின்றி அனாதியாய் நங்கட்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகம்கொண்டுற்றான்.

71.
குன்றுதோறாடல் செய்யும் குமரவேள் மேருவென்னும்
பொன்திகழ் வெற்பின்வந்து புவனங்கள் முழுதும் அங்கண்
சென்றுறை உயிர்கள் முற்றும் தேவரும் தன்பால் காட்டி
அன்றொரு வடிவம் கொண்டது அயர்த்தியோ அறிந்தநீதான்

72
பொன்னுரு அமைந்த கஞ்சப் புங்கவன் ஆகி நல்கும்
என்னுரு ஆகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும்
மின்உரு என்ன யார்க்கும் வெளிப்படை போலும் அன்னான்
தன்னுரு மறைகளாலும் சாற்றுதற்கு அரியதன்றே.

73.
பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் தொகையை எல்லாம்
ஏஎனும் முன்னம் வீட்டும் சிறுவன் என்று எண்ணல் ஐய
ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம்
நாயகன் அவன்காண் நாம்செய் நல்வினைப்பயனால் வந்தான்

74
சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னில்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேர் இலா முதல்வன் வன்மையாவரே நிகழ்த்தற் பாலார்

75.
பாரிடர் சேனையோடு படர்ந்ததும் இலக்கத் தொன்பான்
வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச்
சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியும் தூக்கின் மாதோ
ஆரண முதலாம் மேலோர்க்கு அனைத்துமோர் ஆடலே காண்

76.
துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன் சூழ்ந்த
வெய்யதா னவரை எல்லாம் விரைந்துடன் அறுத்துநீக்கிக்
கையில்வேல் அதனால் சூரன் ஆற்றலும் கடக்கும்யாதும்
ஐயுறேல் காண்டி என்றான் அறிதுயில் அமர்ந்த பெம்மான்

77.
மால்இவை பலவும் கூறி மகபதி உளத்தைத் தேற்றி
ஓலமொடு அவுண வெள்ளம் உம்பரும் செறிந்த செவ்வேள்
பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்தும் என்றே
வேல்உடை முதல்வன் பாங்கா விண்ணவரோடும் போந்தான்


வேறு

78.
அன்னதன்மை கண்டு அருமிகன் முறுவலிசெய்து அடுபோர்
உன்னிஏகலும் வானமும் வையமும் ஒன்றாத்
துன்னுதானவப் பெருங்கடல் ஆர்த்து அமர் தொடங்க
முன்னம் ஏகிய பாரிடர் யாவரும் முரிந்தார்.

79.
முரிந்தகாலையில் பூதரின் முதல்வர்கள் முரண்போர்
பரிந்து சாய்ந்தனர் இலக்கரோடு எண்மரும் பொருதே
இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாம்
தெரிந்து திண்திறல் மொய்ம்பினோன் சிலைகொடுசேர்ந்தான்

80
சேர்பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி
நேர்புகுந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்
மார்பு வெம்கரம் கழல்அடு வரைகளாய் வீழ
ஈர்பு நின்று அமர் இயற்றினன் சிறுவரை இகலி

81
மாகம்மேல் நிமிர் ஆயிரகோடி மாகடலுள்
நாகம்ஒன்று சென்று அலைத்தென நண்ணலர் எதிர்போய்
ஆகவம்புருந்து உலப்புறாத் தனமைகண்டு அழுங்கி
ஏகநாயகன் தனதுபால் வந்தனன் இளவல்

82
காலை அங்கதில் அவுணர்தம் தானையோர் கணத்தில்
சாலம் ஓடின பூதரில் தலைவரும் சாய்ந்தார்
கோல வெம்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்
பாலனே இவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும்

83,
தண்டும் நேமியும் குலிசமும் சூலமும் தனுக்கள்
உண்டு உமிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும்
பிண்டி பாலமும் கணிச்சியும் பாசமும் பிறவும்
அண்டர் தந்திடு படைகளும் சொரிந்து நின்று ஆர்த்தார்

84
பாரிடங்களின் படை எலாம் நெக்கலும் பாங்கர்
வீரமொய்ப்பனும் இளைஞரும் வருந்தி மீண்டதுவும்
கார்இனம்புரை அவுணர்தம் செய்கையும் காணா
முரல் செய்தனன் எவ்வகைத் தேவர்க்கும் முதல்வன்

85
நாட்டம் மூன்றுடைத் தாதைபோல் சிறிது இறை நகைத்து
நீட்டம் மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்
கோட்டி நாண்ஒலி கொண்டிட அமரரும் குலைந்தார்
ஈட்டம் மிக்கபல் உயிர்களும் துளக்கம் எய்தினவே.

86
முக்கணன் உதவிய திருமுருகன்
முரண்உறுவரிசிலை முதிர்ஒலி போய்த்
தொக்கன செவிதொறும் நுழைதலுமே
தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும்
நெக்கன பகிர்வன இரதம்எலாம்
நிரைபட வருபரி புரள்வனவே
மைக்கரி தரைமிசை விழுவனவால்
மதிதொடு நெடுவரை மறிவனபோல்

87
மாசறு மறைகளின் மறையதனை
மலைமுனி உணர்வகை அருள் புரியும்
தேசிக முதலவன் வரிசிலையில்
செறிமுகில் உறைவகை சிதறுவபோல்
ஆகதம் அளவில கடவினனால்
அடல்கெழும் அவுணர்கள் புடைேவளையும்
காசினி அகலமும் விரிகடலும்
ககனமும் மிடைவன கணையெனவே.

88
கொடிகளை அடுவன அளவிலவே
,கிடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அலவலவே
பரிகளை அடுவன அலவிலவே
கடகரி அடுவன அளவிலவே
கனைஒலி இரதமொடு அவுணர்கள்தம்
முடிகளை அடுவன அளவிலவே
முழுதுலகு உடையவன் விடுசரமே.


89.
பரவிய தருவினம் என அவுணப்
படைநிரை விழுவன கொடுகடலில்
திரைஎன விழுவன புரவியினம்
திருநெடு வரைகளில் விழுவனதேர்
கருமைகொள் மணிமுகில் இனம்எனவே
கடகரி விழுவன கனவரைசூழ்
இரவியும் மதியமும் விழுவனபோல்
எழுவன கவிகையும் விழுவனவே.


90
செல்லுறு தாள்களும் அடுபடைகள்
சிந்திய சிங்கைகளும் திறலே
சொல்லிய வாய்களும் விம்மலுறும்
தோள்களும் நோக்குறு துணைவிழியும்
கல்லென ஆர்த்திடு கந்தரமும்
கவசமும் வீரர்கள் துவசமுடன்
எல்லையி லாதுஅமர் தனிமுதல்வன்
ெய்திடும் வாளிகள் கொய்திடுமே.


91
வட்டணை கொண்டிடு மால்வரையும்
எட்டெனும் ஒங்கலும் யானைகளும்
பட்டுருவிக் கணை பாறினவால்
ஒட்டலர் ெங்ஙனம் உய்குவதே.

92
பொன்னுல கெல்லை புகுந்துலவும்அந்னம் உயர்த்திடும் அண்ணல்பதம்
துன்னுறும் அச்சுதர் தொல்உலகில்
மின்எனவே செலும் வேள்கணேயே,

93
மேதினி கண்டு விரைந்து புகும்
பாதலம் ஊடு பரந்து செலும்
மூதகும் அம்டமுகட் டுருவும்
மரதிரம் ஏகுறும் வளஅளல் சரம்

94
மூவிரு செய்ய முகத்தொருவன்
ஏவிய செஞ்சரம் எங்கும்உறா
மேவலர் தங்களை வீட்டிடும்வேறு
ஏவர்கள் கண்ணுண் இறுத்திலவே.

95
ஆனனம் ஆருள அண்ணல்சரம்
தானவர் சென்னிகள் தள்ளுதலும்
வான் இடைபோயின மாண்கதிர்கள்
மேனி மறைப்புறும் வெய்யவர்போல்

96
வாள்எழு வேல்பிற வாங்கினர் தம்
தோள்கலை வாளி துணித்தெறிய
நீள்இடை சென்று நிரந்திடுதம்
கேளிரை அட்டன கீழ்மையர் போல

97
மாசகல் வானகம் மாதிரவாய்
காசினிவேலை களத்தின் அகம்
பாசறை சுற்றிய பாடியெலாம்
ஆசற அட்டனன்் அற்புதனே

98
அட்டிடு கின்றுழி அம்புயன்மால்
ஒட்டுறு வாசவன் உள்ணகிழாக்
கெட்டனர் தானவர் கேடில்துயர்
விட்டனம் என்று விளம்பினரே.

99
அடைந்தனர் விம்மிதம் ஆங்கு அவுணர்
மிடைந்தது நோக்கினர் வேற்படையோன்
தடிந்தது காண்கிலர் தாரணிமேல்
கிடந்தது கண்டனர் கேசரரே

100
அலமரு பாரிடர் அவ்வவர்தம்
தலைவர்கள் ஏனையர் தானவர்தம்
மலிபடை சாய்த்து வயம்புனைவிற்
குமரனை ஆர்ப்பொடு போற்றினரே

101
வள்ளல் சரம்பட வான்முகடு
கொள்ளுறு தானை குழாம்தொலைய
வெள்ளிடை ஆயின விண்ணவர்தம்
உள்ளகம் ஆற்ற உவப்புறவே

102
அண்ட கடாகம்அது அப்புறமாய்த்
கொண்டிடு தானவர் கொள்கையிது
கண்டு இறைவன்கழல் காணநெறி
உண்டுஇனி என்றனர் உளமகிழ்வார்

103
காற்றென அ்ண்ட கடாகநெறி
தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா
மேல்திகழ் தேர்கரி வெம்பரியின்
ஏற்றமொ டொல்லென ஏகினரால்

104
அந்நெறி ஏகிஇவ் அண்டம்எலாம்
தன்னினர் வான்புலி சூழ்ந்துவெளி
என்னதும் இல்லென ஈண்டினரால்
முனநுற வந்து முடிந்தவர் போல்

105
சூரன் எனப்படு தொல் இறைவன்
பேர் அமர் ஆற்றிடு பெற்றியினால்
தேர்இடை வந்துறு செய்கைதெரீஇ
ஆர்வமொ டேநெடிது ஆர்த்தனரே.

106
ஆர்த்தனர் தம்முன் அடைந்தவர்தாம்
பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய்
ஈர்த்திடு சோரி இடைப்படுதல்
பார்த்தனர் சிந்தை பரிந்தனரே,

107
பகரிந்தனர் நம்படை பட்டிடவே
புரிந்திடு வானொடு போர்புரியா
விரைந்து வயம்கொடு மீடும் எனாத்
தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே

108
தேற்றிடு கின்றுழி தேவரெலாம்
போற்றிட வீரர் புடைக்கண்உற
ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே
தோற்றிலன் ஈறொடு தோற்றமிலான்

109
சேய் உருவாகிய சீர்முதல்வன்
மேயது கண்டு மிகச்சிறியன்
பாய்பரி யானை படைத்தும்இலான்
ஏஇவனே நமது எண்ணலனே

110
ஆண்தகை மைந்தன்இவ் அண்டமெல்லாம்
ஈண்டிய தானை இமைப்பொழுதில்
மாண்டிட அட்டனன் மற்றிதுதான்
நீண்டிடும் அற்புத நீர்மையதே.

111
அன்னது நின்றிட அங்கவன்மேல்
மன்னவர் மன்னவன் வந்துபொரு
முன்அமர் ஆற்றி முடிக்குதும் யாம்
என்ன இயம்பினர் யாவருமே.

112
தற்பமொ டின்னன சாற்றியவண்
முற்படு தானவர் முக்கணுடைத்
தற்பரன் நல்கிய சண்முகனை
வற்புடன் ஆர்த்து வலைத்தனரால்

113
வளைந்திடு காலையில் வானவர்கள்
உளைந்தனர் பூதர்கள் உட்கிமனம்
தளர்ந்தனர் வீரர் சலித்தனரால்
விளைந்தது பேரமர் மீட்டுமெனா.

114
ஐயன் மருத்தினை அத்துணை நோக்கிக்
கையணி நெற்றி கடைக்கிழை யாகி
வெய்யவர் தானவர் மேவுழி எல்லாம்
வையம் விடுக்கிகி வல்லையில் என்றான்

115
அட்டுறுநீப அலங்கல் புனைந்தோன்
கட்டுரை கொண்டு கழல்தொழு காலோன்
ஒட்டுறு நண்ணலர் உற்றுழி காணா
விட்டனன் அம்ம விறற்பரி மான்தேர்

116
மண்ணிடை சென்றிடும் மாதிரம் நீந்தும்
விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாம்
கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர்
எண்ணினும் நாடரிது எந்தை பிரான்தேர்
117

117
சேய்அது காலை திறத்திறம் ஆகி
மூயின தானவர் மொய்ம்புறு தானை
சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம்
ஆயிர கோடிகலாக்கணை தொட்டான்

118
பரித்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரம் துணிவுற்றன செம்புனல் ஆழி
சொரிந்த, பிணக்கிரி தஉறிறிய அற்றால்
நெரிந்தது வையம் நெளிந்தது நாகம்

119.
பொய்கொலை ஆற்றிய பூரிய ருக்குஆர்
செய்குவர் நனமை செறிந்துளர் ஏனும்
கைகெழு ஞானிக ளேகறித் துண்ட
மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை.

120
ஒன்னலர் மீதுஇன் உயிர்க்குஉயி ரானோன்

மின்என வீசிய வெம்சர மாரி
பின்னுர முந்து பெயர்ந்திடும் என்றால்
அன்னவன் தேர்விரைவு ஆர்கணிக் கின்றார்

121
பரத்தினும் மேதகு பண்ணவன் வார்வில்
கரத்தினை யும்விரை வால்கரம் தூண்டும்
சரத்தினை யும்தடந் தேரினை யும்கால்
உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளார்

122
வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்
கைவிசை யோநெடுங் கால்விசை தானோ
எவ்விசை யோவிசை என்றனர் வானோர்

123.
துய்யவன் வாளி துணித்திட வீரர்
கையொடு வானிடை செல்வ கணிப்பில்
ஐயிரு வட்டம் அராப்புடை பற்ற
வெய்யவர் பற்பலர் விண்எழல் போலும்

124
கால்ஒரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்
வால்ஒரு பாங்கர் மருப்பொடு எருத்தம்
மேல்ஒரு பாங்கர் வியன்கை ஓர்பாங்கர்
தோல்இனம் இவ்வகை யேதுணிகின்ற

125
பல்லணம் அற்றன பல்முழு தற்ற
செல்லுரு தாளொடு சென்னியும் அற்ற
ஒல்லொலி அற்ற உரம்துணி வுற்ற
வல்லமர் நீந்துறு மாத்தொகை முற்றும்

126
மாழைகொள் வையம் மடிந்திட நேமி
ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச்
சூழுறும் எல்லை கெழீஇயன் போலும்

127
ஏறிய தேர்களும் யானைகள் யாவும்
சூறைகொள் வாசிக ளும்துணி ழுற்றே
வீறகல் வீரர் மிசைப்பட வீழ்ந்தன
மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல்

128
ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி
மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்
சாலும் இவற்கிது தாள்வலி யாற்கொல்
காலன் எனப்புகல் கட்டுரை பெற்றான்

129
எறிபடை யாவையும் மம்அ தாகச்
செறிபடை யாவையும் சேயவன் ஏவால்
முறிபடு கின்ற முனிந்துக வணப்புள்
கறிபட மெய்துணி கட்செவி யேபோல்

130
முன்உறு வார்கள் முரண்படை தூவிப்
பின்உறு வார்பெய ராது புடைக்கண்
துன்னுறு வார்க ளெலாம்துணி வாக
மின்என எங்கணும் வேள்கணை தூர்த்தான்

131
;சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை
மால்எரி நேமிகொல் வச்சிர மேகொல்
காலொடு சென்ர கனற்குழு வேகொல்
வேலது கொல்லென வேள்கணை விட்டான்

132
மழைத்திடு மெய்யுடைமாற்றலர்கள்
இழைத்திடு மாய இயற்கைகளும்
விழுத்தக வீசும் விறற்படையும்
பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால்

133
முக்கணன் மாமகன் மொய்கணைகள்

தொக்கவர் யாக்கை துணித்திடலும்
மெய்க்கிடு பல்கலன் மின்விழல்போல்
திக்குல விப்படி சிந்தினவே

134
அண்ணல் சரங்கள் அறுத்திடலும்
எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம்
மணணை அளந்து அயில் மாலெனவே
விண்ணை அளந்து விழுங்கினவே

135
சூழறு தானை துணித்தஉடல்
ஏழெனும் நேமியும் எண்தகுபேர்
ஆழியும் விண்ணுண் அடைத்துஇமையோர்
வாழ்உல கங்களை வௌவியவே.

136
காடி யிழந்து கவந்தமதாய்
ஆடின வெள்ளமும் ஆயிரமா
கோடிய துண்டு குகன்கணையால்
வீடின எல்லை விதிக்குநர்யார்

137.
வீழுறும் மாற்றலர் மெய்க்குருதி
ஆழிகள் ஆதி அகன்புவியில்
பூழைக ளூடு புகுந்து பிலம்
ஏழுள எல்ளையும் ஈண்டியதே

வேறு

138
பாதல எல்லை பரந்திடு சோரி
பூதலம் மீண்டு புகுந்து பராவி
ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல்
மாதிரம் எங்கும் மறைந்தன அன்றே.

139
மீன் உடுவாக விளங்கிய திங்கள்
பானு மலர்ந்திடு பங்கயம் ஆகச்
சோனைகொள் மாமுகில் தோணிய தாக
வான்நிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும்


140
மாசறு கூற்றனும் மற்றுவர் தாமும்
கேசரர் ஆகிய கிங்கரர் யாரும்
பாசம் மலைத்திடு பல்பிணி பற்றா
வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தனர்

141
பால் உறு கின்ற பணிக்கிறை நாப்பண்
மால்அரு ளில்துயில் மாட்சிய தென்ன
நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர்
வேலையின் மீது விளங்கிய தம்மா

142
மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி
ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்
தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன்
விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும்

143
சிறைப்புற வுக்குஅருளஅ செய்திட மெய்யூன்
அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்
நெறிப்படு வானவர் னேரலர் யாக்கை
உறப்படு சோரிமெய் உற்றிடும் நீரார்


144
ஆனதோர் எல்லையில் அண்டம்  நிறைந்த
சேனைகள் வீந்தன செம்மல் கரத்தால்
ஊந்உயிர் பூதம் ஒழிந்தன முக்கண்
வானவன் மூரலில் மாய்ந்திடு மாபோல்


வேறு
145
அண்டம் ஈங்கிது முற்றொருங்கு ஈண்டிய அவுணர்
தண்டம் மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்
கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்
கண்டு மற்றவை  தொலைத்தனன் செலுத்திடு கணையால்

146
அறுத்து வெம்முனைத் தானையை
   யாண்டுசெல் அனிகம்
மறித்தும் வந்துவந்து அடைதரும்
   இவணஎன மனத்துட்
குறித்து வெங்கணை மாரியால்
   அண்டகோ ளகையின்
நெறித்த ரும்பெரு வாயிலை
     அடைந்தனன் நிமலன்

147
ஆண்டு செல்நெறி மாற்றியே
   அண்ணல்வெம் கணையால்
மாண்ட தானைகள் சோரியும் 
    களேவர மலிவும்
நீண்ட பாதலம் கடல்புவி
   கொண்டுவான் நிமிர்ந்தே
ஈண்டு கின்றது கண்டனன்
    வரைபக எறிந்தோன்

148
நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடும் நிமலன்
 பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு
 கற்றை வெம்சுடர் வடவைபோல் ஆக்கி அக்கணத்தில்
உற்று நோக்கினன் எரிந்தன களேவரத்து ஓங்கல

149
வெந்து நுண்துகள் பட்டன களேவரம் விசும்பின்
உந்து சோரிநீர் வறந்தன மூவகை உலகும்
முந்து போலவே ஆயின முளரியான் முகுந்தன்
இந்திராகியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி.

150
பாறு உலாவரும் களேவரத்துஅமலையும் படிமேல்
வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து
நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்
ஆறு மாமுகன் ஆடலை உன்னின னாம்கொல்

151
ஆகும் எல்லையில் ஒல்லையில் அடுகளத்து அடைந்த
சேரு நெஞ்சுடைக் சஊரன் இத் திறமெலாம் தெரிந்து
மாகம் நீடுநம் தானையை ்லைத்தமாற் றலனை
நாகர் தம்மொடும்முடிக்கிவன் யான்என நவின்றான்

152
மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன் மனத்தில்
சீற்றம் மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக்
காற்றின் ஒல்லைவந்து ஏற்றலும் மருத்துவன் கடவிப்
போர்று நேர்மிசை முருகனும் சென்றெதிர் புகுந்தான்


153
புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையில்
மிக்க பன்னிரு கரங்கலும் வியன்படைக் கலனும்
தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்
தக்க வேஎன அவுணர்கோன் இன்னன சாற்றும்

154
சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால்
இறந்தி டேனியான் என்றும்இப் பெற்றியாய் இருப்பேன்
மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே
இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலும்நீ இதுவே.

155
உள்ளம் நொந்துநொந்து என்பணி ஆற்றியே உலைந்து
தள்ளு றும்சுரர் மொழியினைச் சரதம்என் றுன்னிப்
பிள்ளை மென்மதி  யாலிவண் வந்தனை பெரிதும்
அள்ளல் உற்றுழிப் புகுந்திடும் கயமுனி அதுபபோல்

155
உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலன்என் றுன்னை
விடுப்ப தில்லையால் லெரிந்து கொடுக்கினும் விரைவிற்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையும்
கெடுப்பன் என்றனன்தன்பெருங் கிளையுடன் கெடுவான்.

156
உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலன்என் றுன்னை
விடுப்ப தில்லையால் வெரிந்து கொடுக்கினும் விரைவிற்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையும்
கெடுப்பன் என்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான்

157.
வெம்பு ரைத்தொழிற்கு ஒருவனாம் கயவநீ வறிதே
வம்பு ரைத்தனை ஆவதொன் றில்லைநின் மார்பம்
செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய்
அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனனஅ அமலன்
158
ஆரும் நேரிலாப் புங்கவன் சேய்இனது அறையைக்
சூர னாகிய அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து
மேரு நேர்வதோர் வரிசிலை எடுத்துவிண் இழியும்
வாரி போன்றிடு நாணினை ஏற்றியே வளைத்தான்

159
வளைத்த டம்கிரி புரைவதோர் சிலையினை வயத்தால்
வளைத்த  செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்
வளைத்த டம்கடல் வந்திடு நஞ்சொடு மலைவானஅ
வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார்

160
சிலையை வீசினர் கொடுமரம் வீசினர் செறமூ
இலையை வீசினர் படைஎலாம் வீசினர் எதிர்ந்தார்
உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை
வலையை வீசியே பிணித்திட மதித்துளர் என்ன

161
கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ் கணையால்
கொண்டல் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து
விண்டு லாவர அரக்கினால் குயின்றதோர் வெற்பைச்
சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான்

162
வீடி னார்களும் புயம்கரம் துணித்திட மெலிந்த
வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே
ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவம்
 கூடி னார்களும் ஆயுனர் பாரிடக் குழாத்தோர்

163
பூதர் சாய்ந்துழி இலக்கரோடு எண்மரும் பொருவில்
வேத நாயகன் தூதனும் சூழ்ந்துடன் மேவி
கோதை தூங்கிய கொடுமரம் ஆயின குித்துச்
சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேல் சொரிந்தார்

164
சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலும் சூரன்
தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செவ்வி
விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து
பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி

165
பரப்பின் ஈண்டிய வீரர்தம் சூழ்ச்சியைப் பாரா
உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன்
பொருப்பு நேர்சுலை குனித்துவெம் சிலீமுகம் பொழிந்து
திருப்பெ ருந்தடந் தேரொடும் சாரிகை திரிந்தான்

166
நூறு கோடிவெம் சரம்ஒரு தொடையுற நூக்கிச்
சூரை யாம்என வட்டணை திரிந்துளான் சூழ்வோர்
மாறு தூண்டிய சரங்களைத் துணித்துமற் றவர்கள்
ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான்

167
வையம் வில்லுடன் இற்றபினஅ ணற்றவர் மலைவு
செய்ய உன்னுமுன் மொய்ம்பிலும் உரத்தினும் சிரத்திம்
கையி னும்கணை ஆயிரம் சுடும்தீப்
பெய்யும் மாரிபோல் செரித்தனன் செம்புனல் பெருக

168
புரம்த னில்செறி கறையினார் புலம்புகொள் மனத்தார்
உரம்த ளர்ந்துள்ளார்  வில்வலி இழந்துள்ளார் ஒருங்கே
இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல்
திருந்த லன்தடந் தோர் மிசைப் பாய்ந்தனன் சினத்தால்

169
பாய்ந்த திண்டிறல் மொய்ம்பினானஅ பரமன்முன் அளித்த
நாந்த கம்தணை உரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன்
ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோற்
காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்தில்ஓர் கரத்தால்

170
அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்கலும் அகலம்
பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் பயத்துச்
சிங்கம் வீழ்ந்துஅயர் வுற்றிடத் தூதனைச் செகுத்தல்
இங்கெ னக்கிஅடா தென்றுஎடுத்து உம்பரில் எறிந்தான்

171
எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும் ஏந்தல்அறிந்து மீண்டுசென்று ஆறுமாமுகனஅபுடை அடைந்தான்
தறிந்து போகிய சிலையினை தரைமிசை யிட்டுச்
சிறந்த தோர்தனு எடித்தனன் தீயரிற் தீயோன்

172
அத்த மேல்கிரி உதயமால் வரைத்துை ஆன்று
நித்த லும்பிறர்க்கு இடர்செய்து மேருவின் நீண்டு
கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன்
சத்தி யால்அட தின்றவெற்பு அனையதுஅத் தனுவே

173
வனைக ருங்கழல் அவுணன்அக் கார்முகம் வளைத்து
புனலும் அங்கியுண் காலுடன் ஒலிப்பன புரைய
எனைவ ரும்துளக் குறும்வகை நாண்ஒலி எடுத்தான்
அனைய பெற்றியை அறின்தனன் அமரரை அளித்தோன்


174
புயலின் மேனியன்  புவிநுகர் காலையும் போதன் துயிலும் மாலையும்துஞ்சிய வேலையும் தொலையாது
இயலும் அண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்கும்
கயிலை போல்வதோர் சிலையினை எடுத்தனன் கந்தனன்

175
வாரி யால் உலகழிந்திடும் எள்லையினஅ மருங்கில்
மேரு ஆதியாம் வரைகளும் விசும்பில்
காரும் மேலுள உலகமும் அமரரும் கயிலைச்
சாரல் சூழ்தல்போல் விரவிஆர்ப் புடையது அத்தனுவே

176
நீட்டம் மிக்கதோர் அப்பெரும் சிலையினை நிமலன்
தோள்து ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும்
ஈட்டம் மிக்கபல் உயிர்களும் வான்உரு மேற்றின்
கூட்ட மாகியே ஆர்த்தெனக் குணத்தொனி கொண்டான்

177
குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர் கொற்றத்து
அணங்கு லாவரு கார்முகம் குழைத்துளை அவதி
இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத்து இரட்டி
கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினும் கடியோன்

178
வான் மறைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய்
மீன் மறைத்தன கதிர்வெயில் மறைத்தன வேலை
தான் மறைத்தன வசுமதி மறைத்தன தருஆர்
கான் மறைத்தன வரைகளை மறைத்தன கணைகள்

179
காற்றில் செல்வன அங்கியில் படர்வன கடுங்கண
கூற்றில் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடுய
பாற்றுத் தொல்சிறை உள்ளன பல்தலை படைத்த
நால்திக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையில் நடப்ப

180
பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்
வரைகி ழிப்பன அண்டமும் பொறுப்பன வான்தோய்
உரும் இடிக்குலம பொருவன விடத்தைஉண்டு உமிழ்வ
கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள்

181.
துண்ட வெண்பிறை வாள்எயிற்று அவுணர்கோன் துரப்ப
மிண்டு வெங்கணை எங்கணும் செறிந்திட விண்ணோர்
கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத்துஐய
உண்டு கொல்நமக்கு ஒளிப்பதோர் இடம்என  உரைத்தார்

182
உரைத்து ளார்க்குமால் மாறுரை வழங்குமுன் ஒள்வேல்
சரத்தில் ஏந்திய குமரவேல் இன்னது கண்ணால்
தெரிந்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோல் சிலதன்
சரத்தி னால்அவன் தூண்டிய கணையெல்லாம் தடிந்தான்

183
மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை வள்ளல்
தடிந்த தன்மைகண்டு அமரர்கள் உவகையில் தழைத்தார்
படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர
விடிந்த காலையில் எழும்கதிர் கண்டமே தினிபோல்

184
அங்கவ் வெல்லை அவுணர்கோன், எங்கள் நாதன் எதிருற
மங்குல் போல்வ ரம்பிலாச் செங்கண் வாழி சிதறினான்


185
ஆயகாலை அறுமுகன் தீயன் உந்து செறிகணை
மாய வாளி மாமழை ஏயெனாமுன் ஏவினான்

186
எங்கள் நாதன் ஏவிய துங்க வாளி சூர்விடும்
புங்க வங்க ளைப்புரத்து அங்கி போல்அ றுத்தவே

187
அறுத்த பின்னும் அறனிலான் மறுத்தும் வாளி மாமழை
கறுத்த கண்டர் காளைமேல் செறுத்து வல்லை சிந்தினான்

188
சிந்து கின்ற செம்சரம் வந்து றாமுன் வந்தெனக்
கந்தன் நூறு கணைதொடா அந்தில் பூழி ஆக்கினான்

189
பூழி செய்து பொன்னென. ,ஊழி நாதன் ஒண்சரம்
ஏழு நூறது ஏவினான் சூழும் மாயை தோன்றல்மேல்

190
மாயை மைந்தன் மற்றதை ஆயவாளி யால்அறுத்து
ஏயினா ன்இ ராயிரம் சேயின் முன்சி லீமுகம்

        வேறு

191
விட்டதனை அத்தொகை விறல்பகழி தன்னால்
அட்டுவிரை வில்கடவுள் ஆயிர விரட்டி
கட்டழலை ஒத்துள கடும்கணைகள் தம்மைத்
தொட்டனன் வருத்தமொடு சூர்கிளை துளங்க

192
முராரிஉத வும்சுதனை முந்துதளை யிட்டுஆண்டு
ஓராயிரம் அளித்தபரன் உய்த்தகணை செல்ல
இராயிரம் நெடும்பகழி ஏவிஅவை நீக்கி
அராஇறையும் வையமும்அழுங்கலுற ஆர்த்தான்

193
ஆர்த்தவன் விடும்கணை அனைத்தினையும் முக்கண்
மூர்த்திதரு கான்முனை செலச்செல முடித்தான்
கார்த்தெழு புகைப்படலை கான்றுநிமிர் செந்தீ
சேர்த்தினவை யாவையும் மிசைந்திடு திறம்போல்

194
ஐயன்விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்
வெய்யன்விடு வாளிகளை வேள்கடிது அறுக்கும்
எய்யும்நெடு வெம்பகழி இற்றவைகள் சிந்தி
வையம்மிசை போகியன வானம்அணித் தென்ன

195
முற்றிய அமர்த்தலை முனிந்தவர் செலுத்தும்
கொற்றநெடி வாளிகள்குறைந்துழி எழும்தீப்
பற்றியது பார்இடை பகிர்ந்தவரை முற்றும்
வற்றியது அளக்கரும் ழறந்துளது கங்கை

196
தார்கெழுவு வேற்படைத் தடக்கையுடை யோனும்
சூரனும்இவ் வாறமர் இயற்றுதொழில் காணா
வீரமட மாதுளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றான்

197.
ஆள்அரிதன் முன்னிளவல் ஆனைவத னத்துக்
காளைமகிழ் பின்னிளவல் கார்முகம் உகைக்கும்
வாளுமழை யேயலது மற்றவர்கள் தம்மை
நீள்விழியி னால்தெரிகி லார்புடையின் நின்றோர்

198
நீடிசமர் இன்னணம் நிகழ்ச்சியுறும் எல்லை
மேடமிசை ஊர்பரன் விடுத்தகணை எல்லாம்
ஈடுபட நூறிஅவன் ஏறிவரும் மான்தேர்
ஆடுறு பதாகையை அறுத்துவிரைந்து ார்த்தான்

199
ஆர்த்துவிறல் வால்வளையை அம்பவள வாயில்
சேர்த்திஇசைத் தான்தனது சீர்த்திஇசைத் தென்ன
மூர்த்தமது தாழ்க்கிலன் முனிந்துகணை பின்னும்
தூர்த்துமுரு கன்தனது தோற்றம்மறைத் திட்டான்

200
மறைந்தபக ழித்தொகையை வாழிமழை தன்னால்
குறைத்தவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சிநெடு மான்தேர்
விறற்கொடி தனைக்கொடிய வெஞ்சரம்ஓர் ஏழால்
அறுத்துமுரு கன்பரவை ஆழ்கடலில் இட்டான்

             வேறு
201

தான வர்க்குத் தலைவன் தனிக்கொடி
மீன வேலையில் அற்றுடன் வீழ்ந்துழி
பானு கம்பன் எனப்படு பாரிடர்
சேனை காவலன் தெற்றென நோக்கினான்

202
கண்டு சிந்தை களித்துப் பெருமிதம்
கொண்டு குப்புற்று ிசைத்துக் குனித்திடா
அண்டர் போற்றத்தன் னாயிரம் வாயினும்
ஒண்தி றல்சங்கம் ஒல்லைவைத்து ஊதினான்

203
கால்நு கம்படு கந்துகத் தேருடைப்
பானு கம்பன் பனிணதி ஆயுரம்
மானு கம்பவை வாய்வைத் திசைத்தலும்
தான்உ கம்பல தங்கிற்றவ் வோசையே.

204
பாய்பெ ரும்புகழ்ப் பானுகம் பன்வளை
ஆயி ரங்களும் ஆர்த்திட அண்டர்தம்
நாய கன்தன் விறல்கண்டு நாரணன்
தூய சங்கும் முழங்கிற்றுத் துண்ணென

205
போதல் அங்கதில் புங்கவர் யாவரும்
சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன்கொடி
ஆதி நீயென்று அழலினை ஏவினார்

206
ஏவலோடிம் எரிதழற் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி யாகியே
தேவதேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட

207
படுயி லாதுஅமர் பண்ணவன் தேரேமிசைக்
கொடிய தாய்நின்று குக்குடம் கூயது
கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்
விடியல் வைகறை வேலையைக் காட்டல்போல்

208
சங்க மோடு தபனனும் ஆர்த்தலும்
மங்குல்வண்ணத்து வானவன் ஆர்த்தனன்
பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன்
திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே,

209
மறவி ஆர்த்தனன் மரருதங கட்கெலாம்
இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தநன்
அறைக டற்குஅர சானவன் ஆர்த்தனன்
குறைவில் செல்வக் குபேரனும் ஆர்த்தனன்

210
ஆர்த்த ஓசைபோய் அண்டத்தை முட்டியே
சூர்த்த நோக்குடைச் சூரபன்மன் செவிச்
சீர்த்து ளைக்கிம் செறிதலும் தேவரைப்
பார்த்த னன்கடு உண்டன்ன பான்மையால்

211
மாறில என்முன் வருவதற் கஞ்சியே
பாறு போன்று பழுவத் துளைந்துளார்
தேறி வந்து தெழிந்தனர் என்முனும்
ஆறு மாமுகன் ஆற்றல்கொண் டேகொலரம்

212 நன்று  நனறிது நான்முகன் ஆதியாய்
நின்ற தேவர் நிளைஅழிந்து ல்லையில்
கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்
என்று சீறினன் யாரையும் எண்ணலா்

213
இருக்க மைந்தன் இகல்இவண் விண்ணிடை
செருக்கு தேவர் திரலினைச் சிந்துவான்
அருக்கன் ஓடிய உந்தரத்து உய்க்குதி
தருக்கு தேரினைச் சாரதி நீஎன்றான்

214
மற்றிவ் வாறு வலவனை நோக்கியே
சொற்ற காலைத் தொழுதுஎந்தை நன்றெனப்
பொற்றை போலும் பொலன்மணித் தேரினை
வெற்றி யாகஎன விண்மிசைத்  தூண்டினான்

215
பாகன் தூண்டுய பாண்டில்அம் தேர்எழில்
மேகம் கீண்டு மிசைப்படு கூறையின்
ஆகம் கீரி அமரர்கள் ஈண்டிய
மாகம் சென்றது வான்இழிந்து எள்ளவே.

216
சென்ற தேரொடு சேண்இடைப் புக்குவான்
குனறம் அன்ன கொடும்சிலை கோட்டியே
துன்று தேவர் தொகைஇரிந்து  ஓடுற
மன்ற வாளி மழைகளை வீசினான்

217
வீசு கின்றுழி விண்ணவர் மேல்சரம்
நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே
ஈசன் மாமகன் ஈண்டுநின்று எண்இலா
ஆசுகங்கள் உய்த்து அங்கவை சிந்தினான்

218
மர்றவை துணித்தபின் வடிக்கயிறு முட்கோல்
பற்றிய தடக்கைுல பாகுதனை நோக்கிக்
கொற்றஅயில் தூண்டிஒரு குன்றைவெளி கண்டோன்
தெற்றெனவிண் மேல்நமது தேர்விடுதி என்றான்

219
என்னலும் இறைஞ்சிஇர லைப்பரியின் மேலோன்
பொன்னுலகு பார்உலகு புக்குஎழுவ தென்ன
மின்னின்மிளிர் தேரதனை விண்மிசைக டாவி
நன்னெறி செலாஅவுணர் நாயகன்முன் உய்த்தான்

220
வையம்நெடும் வானம்மிசை வல்லைபுகும் எல்லை
ஐயன்இமை யோர்கள்அயர்ந்து ஓடிவது நோக்கி
நையலிர்பு லம்பவிர்ந டுங்கலிர்கள் என்றுஓர்
செய்யகரம் ஏந்திமுரு கநகருணை செய்தான்

221
கந்தன்மொழி வானவர் கணத்தவர்கள் கேளா
எந்தைஇவண் வந்திடலின் யாம்உயிர்ப டைத்தே
உய்த்தனம் எனாவிரைவில் ஓடுவது நீஹ்கி
சிந்தைமகிழ் வத்தொடு திகந்தம்உற நின்றார்

222
நின்றிடலும்வெவ்வுணன் நீர்மையது நோக்கிப்
பின்றிடுவ ராம்பிரம னேமுதல தேவர்
ஒன்றொர்சிறு வன்கொல்எனை உற்றெதிரும்
நன்றிதென வேவெகுளி கொண்டுநகை செய்தான்


223
காய்சினம் மிகுந்துஅவுணர் காவலன் அஆனந்தம்
ஆசுகம் விரைந்துபடர் ஆசுகம தென்ன
வீசுதலும் வாளிபல விட்டுஅவை விலக்கி
ஈசன்அருள் மாமதலை ஏற்றுஇகல் புரிந்தான்

224
சுறுக்கொள மயிர்ப்பொடி உயிர்ப்புவிடு சூரன்
கறைக்கதிர் அயில்பொலி கரத்தன் இவர்தம்மில்
செறுத்துடன் வடிக்கணை செலுத்தி அகல்வான்
மறைப்பதும் மறுக்குது மாகி மலைவுற்றார்

          வேறு

225
விரைந்து இருவோர்களும் வியன்கணை மாரிகள்
சொரிந்தனர் பேர் அமர் தொடர்ந்துசெய் போழ்தினில்
எரிந்தது மாதிரம் இரங்கினர் பார்உளர்
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே.

226
கறங்கினம்போல்வன கலம்செய் குலாலன
திறங்கெழும் ஆழிகளஅ திரிந்தன மானுவ
மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன
துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே

227.
பாதலம் மூழ்குவ பாரிடை சூழ்குவ
மாதிரம் ஓடுவ வாரிதி சேர்குவ
பூதர மேவுவ பூமல ரோன் நகர்
மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே

228
எண்திசை சூழுவ இரும்கடல் பாய்வன
விண்தொடு நேமி வியன்கிரி வாவுவ
கொண்டலின் ஆரிருள் கொண்டுழிபோகுவ
அண்டம்முன் ஏகிவ அங்கவர் ஏறுதேர்

229
பெயர்ந்திடு தேருறு பிழம்புஅவை காணுபு
தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீர்உரு
மயங்கினர் ஆதவர் மருண்டனர் வானவர்
உயங்கினர் பாருளர் உலைந்தனர் நாகரே

230
முதிர்ந்திடு போரினர்  முழங்கிய தேர்செல
அதிர்ந்தது பாருலகு அலைந்தன வேலைகள்
பிதிர்ந்தன மால்வரை பிளந்தது வா்முகடு
உதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே

          வேறு

231
தேர்இவை இரண்டு மாகித் திகழும்ணூ தண்டம் எங்கும்
சாரிகை வருத லோடுஞ் சண்முகன் மீது செல்லச்
சூர்எனும் அவுணர் கோமான் தொலையும்நாள் எழிவிபொங்கி
ஆர்அழல் மழைகான் றென்ன அடுசர மாரி தூர்த்தான்

232
மழுப்படை அநந்த கோடி வச்சிரம் திகழ்முச் சென்னிக்
கழுப்படை அநந்த கோடு குலசம்வேல் அநந்தகோடி
கொழுப்படை அநந்த கோடி குல்சம்வேல் அநந்த கோடி
எழுப்படை அநந்தகோடி இடைஇடை இடிபோல் உய்த்தான்

233
கூற்றுயிர் குடிக்கும் துப்பில் கொடும்படை மாரி தன்னை
ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றையெல்லாம்
காற்றெனப் பகழி தூண்டி முறைமுறை கடிதிற் சிந்தி
மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும்

234
இத்திறம் திரிந்த செவ்வேள் இடைதெரிந்து ஏழொடு ஏழு
பொத்திரம் தன்னைத் தூண்டிப் புகழுறும் அவுணர் செம்மல்
சித்திரத் தேரும் மாவின்  தொகுதியும் சிந்தி நீங்கத்
கைத்தனு வோடும் தீயோன் கதுமெனப் புவிக்கண் உற்றார்

235
நாண்உடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்
ஏண்உடை வயிர வாளி எண்ணில தூண்டி ஏற்பத்
நாணுவின் மதலை கண்டு தன்பெருந் சிலையைக் கோட்டித்
தூணிகொள் கணையின் மாரி தொடுத்து அவை துணித்துவிட்டான்

236
துணிப்புறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி
தணப்பற விடுத்த லோடுஞ் சண்முகன் அவற்றை எல்லாம்
கணைப்பெரு மழையான் மாற்றிக் காசிபன் தனது செம்மல்
அணிப்படு தஓள்மேற் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான்

237
ஊழியின் முதல்வன் மைந்தன் ஓராயிரம் கணையுஞ் சூரன்
பாழிஅம் புயத்துமீது படுதலுங் கடிதே இற்றுச்
சூழறச் சிதறிற் றம்மா தொலைவிலா வயிரம்கொண்ட
காழ்கிளர் வரைமேல் வீழ்ந்த கல்மழைத் தன்மை யேபோல்

238
அந்தமில் வன்மை சான்ற அவுணன்மற் றதனை நோக்கி
முந்துறு வெகுளி தூண்டமுறுவலும் உயிர்ப்பும் தோன்ற
எந்தைதன் மொய்ம்பில் செல்ல ஈராயிரம் பகழி வாங்கிச்
சிந்தையில் கடிதுதூண்டித் தேவரும் மருள ஆர்த்தான்

239
உள்தெளி வுற்றார் காணும் ஒப்பிலா முதல்வன் தோள்மேல்
வீட்டிடு பகழி முற்றும் வெந்தி வெம்துகளதாகிப்
பட்டன திசைகளஅ முற்றும் பரந்தன பகரத்தின் மேலோன்
கண்தழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கையே போல்

240
ஆங்கது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்
நீங்கரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும் மாற்றிப்
பாங்கமர் வயவர் மீதும் பாரிடைப் படைகள் மீதுந்
நீங்கணை அழுத்த லுற்றான் தேவரை இடுக்கண் செய்தான்

241
தன்இணை தானே யாகி நின்றிடும் தனிவேல் வீரன்
அன்னதோர் தன்மை கண்டு ஓராயிரம் பகழி பூட்டித்
துன்னலன் குனித்த சாபம் துணித்தனன் துணியா முன்னம்
பின்னும்ஓர் சிலையை எந்திப்பெருமுகில் இரிய ஆர்த்தான்

242
இம்யரில் மலைத்த சூரன் இம்மென வெருக்கொண்டேகி
அம்பரத் திடையே தோன்ற அன்னது குமரன் காணா
உம்பரில் சென்று தாக்க ஓர்இறை எததிர்ந்து நின்று
நம்பியொடு ஆடல் செய்வான் நவில்அரும்மாயை சூழ்வான்

243
விண்ணிடை நின்ற சூரன் விரைந்துடன் கரந்து சென்று
மண்ணிடை மீட்டும் செல்ல மாநில வரைப்பல் செவ்வேள்
துண்ணென வந்து வெம்போர் தொடங்கலும் தோற்றம் மாற்றிக்
கண்அகல் தூய நீத்தக் கனைகடல் டுவம் ஆனான்

244
ஆயிடை முருக வேள்சென்று அடுசமர் இயற்றும் எல்லை
மாயையில் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற
ஏயென ஆண்டும் செவ்வேள் ஏகியே நெடும்போர் ஆற்ற
காய்கனல் உமிழும் வேலோன் கரந்துபா தலத்தில் நின்றான்

245
ஆறிரு தடம்தோள் வள்ளல் அதுகண்டு பிலத்துள் ஏகி
மாறுஅமர் இயற்றும் எல்லை வல்லைதன் உருவம் மாற்றி
வீறுஉள சிமையச் செம்பொன் மேருவின் குவட்டில் நிற்ப
ஏறுஉடை முதல்வன் மைந்தன் இம்என அங்கட் சென்றான்

246
மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்
பேர்அமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி
நாரணன் உலகில் தோன்ற நம்பியும் தொடர்ந்து போந்து
சூர்ெனும் அவுண னோடு தொல்சமர் ஆற்றி நின்றான்

          வேறு

247
ஆற்றிடு கின்ற காலத்து அவுணர்கோன் அண்ட கோள
மேல்திகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி
ஏற்றுஎதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரை
கூற்றுறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றம் கொண்டான்

248
கந்துக விசய மான்தேர் இற்ரலும் சடுங்கோல் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எனுழ்மணித் தடந்தேர் தன்னை
சிந்தனை செய்த லோடும் சேண்கிளர் செலவிற் றாகி
வந்திட அதந்மேல் ஏறி வல்லைபோர் புரித லுற்றான்

249
மண்டமர் புரியும் எல்லை வள்ளல்தன் பகழி தன்னால்
அண்டமது அடைந்த வாயில் அடைத்ததும் அப்பா லுள்லதண்டமது எல்லாஞ் செல்லாத் தன்மையும் தகுவர் கோமான்
கண்டனன் நன்று நன்றென் இறைத்தொழிற் காவல்என்றான்


250
இறைதொழில் அவுணர் செம்மல் ஏத்துதன் சிலையை வாங்கித்
திறத்தொடும் அநந்தகோடி செம்சரம் தூ்டி அண்ட
நெறிப்படு வாயில் பொத்தும் நெடுங்கணைக் கதவம்முற்றும்
அறுத்துதுண் தூளி ஆக்கு அம்பரம் சுழல விட்டான்

251
காவலன் அணஅட வாயிற் கணைகளின் கபாடம் நீக்கி
மாவொடு களிறும் தேரும் வயவரும் வரம்பின் றாகி
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னை
கூவினன் வருக என்று குவவுத்தோள் கொட்டி ஆர்த்தான்

252
ஆர்த்திடு கின்ற காலத்து அண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த்தொகை களிற்றின் ஈட்டம் திறல்கெழும் இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வெள்ளம் துண்ணென ஈண்டை ஏகிப்
போர்த்தொழில் முயன்று செவ்வேள் புடையுறத் தெழித்துச் சூழ்ந்து

253
நீள்நுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை
ஏணொடும் அண்டத்து அப்பால் இருந்திடு தானை சுற்றச்
சேணுறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாம் தேவர்
காணுத லோடும் உள்ளம் கலங்கிமழ் றினைய சொல்வார்

254
காலமோடு உலகம்உண்ணக் கனன்றுஎழு கரிய தீயின்
கோலமோ அண்டத்து அப்பால் குரைபுனல் நீத்தம் தானோ
ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிர கோடி சூழ்ந்த
சாலமோ யாதோ என்று தலைபனித்து இரியல் போனார்

255
ஆயின காலை தன்னில்அண்டங்கள் தோறும் நின்ற
மாஇரும் தகுவன் தானை வந்துதன் மருங்கு சுற்றிப்
பாய்புனல் முகில்கான் றென்னப் படைத்தொகை வீசி ஆர்ப்பத்
தீஉரு வான செம்மல் சிறிதுதன் நாட்டம் வைத்தான்

256
அடலையின் நலத்தைவீட்டி அரும்பெறல் ஆக்கம்சிந்தி
அடலையின் உணர்வுஇன் றாகும் அவுணர்கோன் தானை முற்றும்
அடலையின் நெடுவேல் அண்ணல் அழல்எழ விழித்த லோடும்
அடலையின் உருவாய் அண்டத்தொல்உரு அழிந்த மனனோ
257
முற்படும் அனிகம் முற்றும் முடிதலும் முடிதல் இன்றி
எல்படும் அண்டத்து அப்பால் ஈண்டுய பதாகினிக்குளஅ
பிற்பட அளப்பி்ல் சேனை பெயர்ந்து மற்று ஈண்டை துன்னிச்
சிற்பரன் குமரன் தன்பால் படைமுறை சிதறிச் சூழ்ந்த

258
பரப்பொடு மிடைந்த தானைப் பரவையை நோக்கி ஐயன்
நெருப்புமிழ் தன்மைத் தென்னநெட்டுயிர்ப்பு அனிலம் உந்தி
உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூனைப்
பொருப்பிடை அழல்புக் கென்னப் பூழியாய் உலகம் போர்த்த

259
மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத் தொல்லை
மாட்சியின் உயிரேதாங்கி மலைதும் என்று உன்னிப் பின்னுஞ்
சூட்சியின் வளைத்தவாபோல் சோதிவேற்குமரன் தன்பால்
சூட்சியின் மேவிற் ம்மா தூயநுண் துகளின் ஈட்டம்

260
அந்தமில் தானை முற்றும் அத்தன்ஓர் உங்கா ரத்தால்
வெந்துக ளாகப் பின்னும் மேலைஅண் டத்துள் நின்ற
தந்தியும் பரியும் தேரும் தானவப் படையும்   ஆர்த்து
வந்துவந் தயலில் சூழ வரம்பிலா முதல்வன் கண்டான்

261
திருத்தமிழ் மதுரை தன்னில் சிவன்பொருள் நிறுக்கு மாற்றால்
உருத்திர சரும னாகி உற்றிடு நிமலன்  வெம்போர்
அருத்திகொள் கணிச்சி சூலம் ஆழிதண்டு எழுவ தாகும்
கரத்தினில் படைகள் தம்மை நோக்கியே கழறல் உற்றான்

262
வென்றிஅம் படைகாள் கேண்மோ விரைந்துடன் தழுவி நம்பால்
சென்றிடும் அனிகம் தன்னைச் செல்நெறி பெறாமல் அப்பால்
நின்றிடு படையைஎல்லாம் நீவிர்பல் லுருக்கொண்டேகி
கொன்றிவண் வருதிர் என்று கூறிமற் றிவற்றைத் தொட்டான்

263
ஆதிநா யகன்விட் டுள்ள படையெலாம் அநந்த கோடி
சோதிஆர் கதிரும் தீயும் பணிகளும் போலத் தோன்றி
 ஏதிலான் அனிகமாகிஇம்பர்உற் றனஇ மைப்பின்
பாதியின் முன்னம் அட்டுப் பெருவிறல் படைத்த மன்னோ

264
தூயதோர் குமரற் சூழ்ந்த படையைமுன் தொலைத்து வீட்டி
ேயின படையோர் ஐந்தும் இம்பரே ஒழிய நின்ற
ஆயிரத் தோர்ஏ ழண்டத்து அகலமும்சென்று சென்று ஆங்கு
ஓய்வற எழுந்த தானை முழுதும்அட்டு உலவு கின்ற

265
ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற
வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரத லோடும்
தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த் துமற் றஇதனை நோக்கி
இவ்வொரு கணத்தின் முன்னம் இவந் உயிர் உண்பன் என்றான்

266
சாற்றிஇத் தன்மை தன்னைத் தானவர்க்கு அரசன் முன்னம்
கூற்றுயிர் நோன்தாள் பண்ணவன் கொடுப்பக் கொண்ட
மாற்றரும் திகிரி தன்னை வாங்கினன் வழிபட் டேத்திக்
காற்றிலும் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான்

267.
விட்டிடு திகிரி யாரும் வெருக்கென விரைந்து சென்று
கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்ததோர் பாணி நீட்டி
வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற
ஒட்டலன் அதனை நோக்கி உளந்தளர்ந்து உயிர்த்து நின்றான்

268
உள்நிலா மாயை வல்ல ஒருதனித் தேர்மேல் நின்றோன்
எண்இலா உருவங் கொண்டே இருங்கணை மாரி தூர்ப்பத்
தெள்நிலா மௌலி அண்ணல் உதவிய செம்மல் நோக்கி
நண்ணலான்  ஒருவன் மாயம் நன்றுநன் றென்று நக்கான்

269
சிறுநகை செய்து மேலாம் சேதனப் பகழி பூட்டி
அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடும் மாயம் முற்றும்
இறைதனில் முடஇத்தி என்றே ஏவலும் விரைவில்ஏகி
முறைநெறி பிழைத்தோன் மாயம் முற்று ஒருங்கு அட்டதன்றே.

270.
மாயையின் உருவம்நீங்க வலிஅழிந்து உள்ளம் மாழ்கித்
தீயவன் ஒருவன் ஆகிச் சேண்உயர் தேரில் நின்றான்
ஆயது தெரிந்து வானோர் அறுமுகத் தவனைப் போற்றி
பாய்புனற் கடலின் ஆர்த்துப் மனிமலர் மாரி தூர்த்தார்

271
தூர்த்தலும் தேரும் தானும் துண்ணெனக் கரந்து சூரன்
போர்த்திடும் அண்ட கூடப் பித்திகை வாயில் எய்தி
ஆர்த்து அறைகூவிப் புக்கு ஆங்கு அப்புறத் தண்டம் செல்லத்
தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந் போனான்

272
தொடர்ந்துதன் மனத்தில் செல்லும் தொல்லையால் இரதத்தோடு
கடந்தபேர் ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடம்தலைப் படலும்  அன்னான் எந்தையோடு இகற்போர் ஆற்றி
அடும்திறல் மாயை நீரால் அப்புறத்து அண்டம் போனான்

273
இந்நிலை அவுணர் கோமான் இருநிலத்து அண்டம் முற்றும்
மின்எனப்படர்ந்து தோன்றி வெய்யபோர் விளைத்து நின்று
பின்னரும் கரந்து செல்லப் பிரானும் அவ்வண்டந்தோறும்
துன்னலன் தனைவிடாது தொடர்ந்து அமர் இயற்றிப் போனான்


               வேறு
274
ஆயகாலை அயன்முதல் தேவர்கள்
நேயம் மிக்க குரவரை நீங்கிய
சேயி னோர்களில் தேம்பித் திருமகள்
நாய கன்தனை நோக்கி நவிலுவார்

275.
வலம்கை வாளுடை மாயைதன் மாமகன்
பொலன்கொள் அண்டப் புரைதலுள் போயினான்
இலங்கு வேற்படை எந்தைதன் போர்இடை
விலங்கி னான்அலன்  என்னும் விளிகிலான்

276
மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டுஒ ரீஇப்
போய தன்மை புணர்ச்சிய தேஅவால்
ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்
தூயன் மற்றது சூழ்ந்திலன் போலுமால்

277
வாடி நாந்என மாற்றல னைத்தொடர்ந்து
ஓடி னான்எந்தை ஒல்லையில் சூரனைக்
கூடி னான்கொல் குறுகலன் ஆகியே
நாடி னான்கொல் அறிகிலம் நாம்எலாம்

278
மாகம் மேல்நிமிர் மற்றைஅண் டத்திலும்
சேகு உலாவிய சிந்தையன் தன்னுடன்
ஏகி னான்ஐயன் என்இனித் தான்வின
வாகு மோஎன்னும் அஞ்சுதும் ஏழையேம்279
என்ற காலைஇ  லங்கெழில் பூவைபோல்
நின்ற மாயவன் நீள்மல ரோன்முதல்
தன்றும் வானவர் சூழலை நோக்கியே
ஒன்றும் அன்பொடு உளப்பட ஓதுவான்

      வேறு
280
வஞ்ச மேதகும்  அவுணர்கோன் ஆற்றலை மதித்தீண்டு
அஞ்சி அஞ்சியே இரங்கலிர் அறுமுகத் தொருவன்
செஞ்சி  லைத்தனி வன்மையும் வீரமும் தெரிந்தும்
நெஞ்ச கத்திடை ஐயுறு கின்றது நெறியோ

281
ஓதி யாகியும் உணர்ந்தவர்க்கு உணரவும் ஒண்ணா
நீதி யாகியும் நிமலம தாகியே நிகளும்
சோதி யாகியும் தொழுதிடும் எம்மனோர்க்கு எல்லாம்
ஆதி யாகியும் நின்றவன் அறுமுகன் அந்றோ

282
ஈறி லாதமர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறு மாமுகம் கொண்டுதித் தானென்ப தல்லால்
வேறு செப்புதற்கு இயையுமோ மேலவன் தன்மை
தேறி யும்தெளி கின்றில உமதுசிந் தையுமே

283
ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்யன் ஏகினும் தொடர்ந்துபோய் வெம்சமர் இயற்றி
செய்ய வேலவன் துரந்துவந் திடும்தினைத் துணையில்
கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிரும் காண்டிர்

284
என்று மாயவன் கழறலும் அயன்முதல் எவரும்
நன்றெ னத்தெளி வுற்றனர் அவ்வழி நின்றான்
ஒன்றின் ஆயிர கோடி  அண்டத்தினும் ஓடி
நின்று நின்றுஅமர் ஆடினன் நிமலனை நேர்ந்து

285.
வெந்தி றற்சமர் ஆற்றியே அவுணர்கோன் மீட்டும்
இந்த அண்டத்து மகேந்திர வரைப்பில்வந்து இறுத்தான்
முற்று நீழலை விடாதுசெல் வோரென முனிந்து
கந்த னும்தொடர்ந்து அவனோடு போந்தன் கடுது
    
        வேறு

286
போந்திடு தன்மை நோக்கிப் புராரிதன் புதல்வன் நங்கள்
ஏந்தலைத் தொடர்ந்தான் என்னா இம்பரில் அவுணர் தானை
தீந்தழல் என்னப்பொங்கிச் செங்கையிற் படைகள் ழீசி
ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதிதன் புடைசூழ்ந்து ஆர்த்தார்

287
நாதனும் அதனைநோக்கி நன்றுஇவர் முயற்சி என்னா
ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை சொன்னான்
மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா
தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ

288
ஆனதோர் காலை தன்னில் அறுமுகம் படைத்த அண்ணல்
தூநகை அங்கிசெல்லத் துண்ணெனப் பதைத்து வீழ்ந்து
தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி
வானவர் மகிழ்ந்து பூத்தூய் வளளலை வழுத்தி நின்றார்

289
முருகுஅவிழ் தொடைய லான்தன் முறுவலால் அனித முற்றும்
விரைவில் நுண் துகள தாகி வீழ்தலும் அவுணர் வேந்தன்
ஒருவனும் தமியன் நின்றான் ஒண்தமிழ் முனிவன் உண்ணத்
திரைகடல் இன்றித் தோன்றும் தீப்பெருங் கடவுள் ஒத்தான்

290
முனபுஅடை குமரன் அங்கண் முறுவலித் திட்ட வாறும்
தன்படை அழிந்த வாறும் தமியன்தான் நின்ற வாறும்
கொன்படை வீர ரோடு குறட்படை ஆர்க்கு மாறும்
அன்புஅடை அவுணன் கண்டுஆங்கு உளத்தொடும்சொல்ல லுற்றான்

291.
பின்னுறு துணைவர் மைந்தர் பேர்இயல் அணைச்சர் ஏனோர்முன்னுற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்
பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமிய னானேன்
என்இவண் செய்வது என்னா உயுர்த்தனன் எண்ணம் மிக்கான்

292
மாயவள்  தன்னை மன்னன் மனத்திடை நினைத்தலோடும்
ஆயவள் வந்து தோன்றி அரும்பெறல் ஆற்றல் மைந்த
நீ ஒரு தமியன் ஆகி நின்றுஉளம் தளர்ந்தே என்னைக்
கூயினைமுன்னிற்று என்னைத் தெரிவுறக் கூறு கென்றாள்

293
அறிந்திடு மாயை இவ்வாறு அறைதலும் குமரன் போரின்
மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்
இறந்திட எஞ்சினேன் யான் யாவரும் எழுதற்கு ஒத்த
திறம்தனை அருண்மோ என்ன நகைத்துஅவன் செப்பல் உற்றான்


294
உறுபடை சுற்றம் துஞ்ச  ஒருவனே யாயும் விண்ணோர்
சிறைவிடுத்து உய்யு மாறு சிந்தனை செய்தி லாய்நீ
அறுமுகன் தன்னோடு இன்னும் அமர்செய்யக் குறித்தியாயின்
நிறைபெரும் செல்வ வாழ்க்கை நீங்கினை போலும் அன்றே.

295
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப்பாலன் என்றே
உன்னலை அவன்கை வேலால் ஒல்லையில் பபடுதி கண்டாய்
இன்உயிர் துறக்க நின்றாய் என்மொழி கேட்பாய் அன்றே
சென்னியில் விதியை யாவ ராயினுந் தீர்ந்தார் உண்டோ

296
நின்றிட அநைய தன்மை நின்ுலம் மகிழும் ஆற்றால்
பொன்றினர் எழுதல் வேண்டில் புறக்கடற்கு ஒரு சாரால்
மன்றல்கொள் அமுத சீத மந்திர கூடம் என்றோர்
குன்றுளது அதனை ஈண்டே கொணருதி கூடும் என்றாள்

297
இவ்வகை உரைத்து மாயை ஏகினள் ஏக லோடும்
மைவரை என்ன நின்ற மன்னவர் மன்னன் கேளா
அவ்வைதன் சூழ்ச்சி நன்றால் அடுகளத்து  அவிந்தோர் யாரும்
உய்வகை இதுவே என்னா உன்னினன் உவகை மிக்கான்

298
ஆவகை உவகை கொள்ளா அமுதமந் தரம்கொண்டு ஏக
ஏவரை விடுத்தும் என்றே இறைப்பொழுது அவுணர் தங்கள்
காவலன் முன்னி மாயக் கடுமுரண் தேரில் நீங்கிக்
தேவியல் அரிமான் ஏற்றுத் திறல்உடை எருத்தம் புக்கான்

299
இந்திர ஞாலம் தன்னை இறையவன் விளித்து நீஎன்
புந்தியின் விரைந்து சென்று புறக்கடல் மருங்கின் மேவி
அந்தமது அடைந்தோர்க்கு ஆவிஅளித்திடும் அமுதம்கொண்ட
மந்தர கிரியைக் கீண்டு  மற்றுஇவண் கொணர்தி என்றான்

300
விழுமிய மாயமான்தேர் வினவிஓர் கணத்தின் முன்னம்
எழுகட லினுக்கும் அப்பால்இருந்திடு கடலின் சார்போய்
அழிவுறாது அங்கண் நின்ற அமுதமந் திரத்தைக் கொண்டு
வளிபடர் கதியின் மீண்டு மகேந்திரம் புக்க தன்றே

வேறு

301
அக்காலையில் இரதம்தரும் அமுதத்தனி வரையின்
மெய்க்கால்வர அந்நாள்வரை வெம்பூசல்இ யற்றி
மைக்காலன்மெய் உயிர்உண்டிடஅறியுந்தொகை முழுதும்
தொக்காலமது எழுந்தாலெனத் துண்ணென் றெழுன்தனவே

302
பரியின்தொகை முழுய்ந்தன பனைபோலிய நெடுங்கைக்
கரியின்தொகை முழுதுய்ந்தன அடுந்தேர்த்தொகை ஈர்க்கும்
அரியிநன்தொகை முழுதுய்ந்தன அவுணப்படை யாகி
விரியும்தொகை முழுதுய்ந்தன மெய்யூறுஅது நீங்கி

303
வடிவற்றுஉடல் அழிவுற்றிடும் உயிரானவும் மருமம்
அடுகைத்தலம் முடிதோள்முதல் அங்கங்கள் குறைந்தே
முடிவுற்றிடும் உயிரானவும் முளரிக்கனல் உண்ணப்
பொடிபட்டுடும் உயிரானவும் எழுந்திட்டன புவிமேல்

304
மிண்டிக்கடுது உயுர்பெற்றெழு வெம்சூர்முதல் அனிகம்
எண்திக்கொடு புவிபாதளம் இருநாற்கடல் எங்கும்
மண்டிக்கக னத்துஏழ்வகை உலகங்களும் மல்கி
அண்டத்தனி முடிகாறும் அடைந்திட்டன மிடைந்தே

305
மாதண்டம்எ ழுந்தோமரம் வயிரப்படை வான்கோல்
கோதண்டம்மு தல்பல்படை கொடுதானவர அனிகம்
வேதண்டம்எ னச்சேண்உயர் வேழல்பரி நிரைகள்
மூதண்டம்வெ டிக்கும்படி முழங்குற்றன அன்றே.

306
எழுந்தான்வயப் புலிமாமுகன் இரவிப்பகை எழுந்தான்
எழுந்தான்எரி முகவெய்யவன் இளமைந்தனும் எழுந்தான்
எழுந்தான்அறத் தினைக்காய்பவன் இருபாலரும் எழுந்தார்
எழுந்தார்ஒரு மூவாயிரவர் ஏனோர்களும் எழுந்தார்

307
சூர்க்கின்றதொல் வடிவங்கொடு துண்ணென் றெழு கின்றோர்
பார்க்கின்றிலர் அனிகங்களைப் பகுவாய்திறந்து இடிபோல்
ஆர்க்கின்றனர் தமதுஆடலை அறைகின்றனர் நம்மேல்
போர்க்கின்றுவந் தவர்யாரெனப் புகல்கின்றனர் இகலால்

308
ஈடுற்றிடு சமர்எல்லையில் இடையுற்றிடு படைகள்
நாடுற்று இவம்எடுத்திட்டனர் நறையுற்றிடு தும்பை
சூடுற்றிடு மணிமாமுடிச் சூரன்புடை தன்னில்
கூடுற்றனர் வெம்போர்செயும் குறிப்புற்றனர் அன்றே

            வேறு

309
உய்ந்திவர் யாவரும் ஒல்லை எழுந்தே
அந்தமில் சேனையொடு ஆர்த்திடு காலை
ிந்திர ஞாலம் எனப்படும் மான்தேர்
வந்தது தானவர் மன்னவன் முன்னம்

310
பொற்றையி னோடு பொலன்கெழு மான்தேர்
உற்றதும் அன்பினர் உய்ந்தெழு மாறும்
இற்றப தாதி இரைந்தெழு மாறும்
தெற்றென மாயவன் செம்மல் தெரிந்தான்

311
மகிழ்ந்தனன் ஆர்த்தனன் வானவர் தம்மை
இகழ்ந்தனன் விம்மிதம் எய்தினன் தாயைப்
புகழ்ந்தனன் மேனி பொடித்தனன் நெஞ்சம்
திகழ்ந்தனன் நன்நகை செய்தனன் அன்றே

312
உந்திநி ரப்புறம் உண்டியது இன்றி
முந்திநி ரப்பிடை மூழ்கினன் வல்லே
வெம்திறல்ஆளி வியன்தவிசு ஏறி
இந்திர நல்வளம் எய்தியது ஒத்தான்

313
ஓங்கிய சென்னி உயர்ந்தன மொய்ம்பு
வீங்கிய தால்உடல் மிக்கு மதர்ப்புத்
தேங்கிய சிந்தை சிலிர்த்த உரோமம்
ஆங்கவன் எய்தியது ஆரறை கிற்பார்

314
வஞ்சனி தந்திடு  மைந்தன்இவ் வாற்றால்
நெஞ்சம் மகிழ்ந்துஅவண் நின்றிடு காலை
நஞ்சம் எழுந்திடு நாள்கொல்இது என்றே
அஞ்சி நடுங்கினர் அண்டர்கள் எல்லாம்

315
பொன்னலர் வாழ்க்கை புவித்திசை வாழ்க்கை
பின்உறு கின்ற பெரும்பத வாழ்க்கை
எல்நகர் வாழ்க்கையும் எய்தியது இன்னே
ஒன்னலர் கொல்லுமுன் ஓடுதும் என்றார்

316
ஊர்ந்திடும் ஊர்திகள் ஓர்புடைதம்பால்
சார்ந்தவர் ஓர்புடை தாம்ஒரு பாலாய்
சேர்ந்திடு கைப்படை சிந்திவிண் ணோர்கள்
பேர்ந்துஇரி கின்றனர் பின்னது நோக்கார்

317
கிள்ளை புறாமயில் கேழ்கிளர் அன்னம்
பிள்ளை மணிக் குயில் பேரிசை ஆந்தை
கள்உணும் வண்டு கரண்டம்அது ஆதிப்
புள்ளுரு வங்கொடு வானவர் போனார்

318
அங்கது நோக்கி அடல்கண வீரர்
மங்கிய தானையும் மாண்டுளர் யாரிம்
இங்குஎழு கின்றனர் யாம்இவண் வீந்தாம்
சங்கைஇல் என்று தளர்ந்துஅலை வுற்றார்

319
இலக்கரும் எண்மரும் ஏந்தலும் நோக்கி
அலக்கணும் அச்சமும் அற்புத நீரும்
கலக்கமும் வெய்ய கடுஞ்சின மும்கொண்டு
உலைக்கனல் அன்ன உயிர்ப்பொடு நின்றார்

           வேறு

320
வென்றி கொண்டவேற்குமரன்இவ் விளைவெலாம் நோக்கி
நின்ற ஒன்னலன் சூழ்ச்சியும் வலவை சொல் நெறியும்
குன்றின் வன்மையும் உய்ந்தெழு பரிசனர் குழுவும்
நன்று நன்றெனக்  கையெறிந்து அழல்எழ நகைத்தான

321
ஆன காலையில் அரிமுகன் அலரிதன் பகைஞன்
ஏனை மைந்தர்கள் அறத்தினை வெகுண்டிடும் ஏந்தல்
சேனை காவலர் யாவரும் சூரன்முன் சென்று
மான வ வீரமோடு இறைஞ்சிநின்று இனையன வகுப்பார்

322
எந்தை நீஇவண் நிற்குதி யாமெலாம் ஏகிக்
கந்த வேளுடன் அவன்படை வீரரைக் கடிந்து
சிந்தர் ஆகிய பூதர்தம் தொகையையும் செகுத்து
வந்து நின்னடி வணங்குதும் வல்விரைந்து என்றார்

323
கொற்ற வீரர்கள் இவ்வகை உரைத்தலும் கொடியோன்
மற்று இவ்வாசகம் நன்றுஎனைப் போற்றுவான் வந்தீர்
பற்றலன்பரு வன்மையும் வீரமும் படுத்து
வெற்றி யின்றுஎனக்கு அருளுதி ரால்என விடுத்தான்

324
விடுத்த  காலையில் விடாதுசூழ் அனிகங்கள் விரவி
அடுத்து வந்திடப் பொள்ளென ஏகியே ஆர்த்துப்
பிடித்த பல்வகைப் படைகளும் உரும்எனப் பெய்து
வடித்த வேற்படை நம்பியை அன்னவர் வளைத்தனர்

325
தீங்க னற்பெரும் கடவுள்பால் செறிஇருள் தொகைபோல்
வாங்கி விற்கரத்து ஐயனை அவுணர்கள் வளைப்ப
ஏங்க லுற்றனர் ஏனையோர் பாரிடர் எம்மால்
தாங்கு தற்குஅரிது இப்பெரும் படைஎனத் தளர்ந்தார்

326
விறல்உ டைப்பஃ றானையும் வெய்யவர் தொகையும்
நொறில்உ டைக்கதி கொண்டுசூழ் வுர்றது நோக்கி
அறுமு கத்தனிப் பண்ணவன் உயிர்த்தொகை அனைத்தும்
இறுதி யைப்புரி கடவுள்மாப் படையினை எடுத்தார்

327
அங்கை யில்கொடு சிந்தையால் வழிபடல் ஆற்றஇச்
சிங்கமுகன் ஆதியாம் அவுணர்தம் திறத்தைச்
சங்கை ின்றியே நின்ரிடு தானைகள் தம்மை
இங்கு வல்லையில் அடுதியேல் எனவிடுத் திட்டான்

328
விடுத்த காலையில் கட்செவி நிரைகளும் விடமும்
ிடிக்கு ழாங்களும் உருத்துரந் உருக்களும் எரியும்
கடற்பெ ரும்கணத் தொகுதியும் அளவிலாக் கடவுட்
படைக் கலங்களு மாய்விரிந் ததுசிவன் படையே

329
இன்ன தன்மையால் அரன்படை மூதண்டம் எங்கும்
துன்னி ஆர்த்துஎழீத் துண்ணெனச் சென்றுசூழ் வுற்று
முன்னர் உய்த்துஎழும் அவுணர்தம் படையெலாம் முருக்கி
ஒன்னலனஅதமர் யாரையும் ஒருங்குகொன் றதுவே

330
முந்து வெய்யசூர்ப் பரிசனத் தொகைஎலாம் முருக்கி
இந்தி  ரப்பெரு ஞாலமாம் தேர்மிசை இருந்த
மந்த ரப்பெரும் கிரியினைத் துகள்எழ மாய்த்துக்
கந்த வேள்புடை மீண்டது சிவந்படைக் கலமே

331
அரிமுகத்தவன் ஆதவன் தனைமுனம் அழன்றேன்
எரிமு கத்தவன் வச்சிர மொய்ம்பன் நூற்றிருவர
முரண் மிகுந்தமூ வாயிரர் அறப்பகை முதலோர்
விரிகடல் படை வெற்பொடு முடிந்துஅவண் வீழ்ந்தார்

332
தன்மை அங்கவை யாவையும் கண்டனன் தளர்ந்தான்
வன்மை நீங்கினன் கவ்றனன் இரங்கிமெய்ம் மறந்தான்
புன்மை யாயினன் உயிர்த்தனனஅ செயிர்த்தனன் புலர்ந்தான்
தொன்மை போலவே தமித்தனன் துணைிலாச் சூரன்
333
கண்ட  கன் படை முற்று ஒருங்கு இறந்தது காணா
எண்தொ கைப்படு  பூதரும் ஏனைவீ ரர்களும்
முண்டகம் தனில் இருந்திடு புங்கவன் முதலாம்
அண்டர் யாவரு் துயர்ஒரீஇ உவகைபெற்று ஆர்த்தார்

334
அழுந்தும் ஆர்இருள் ஒருவிவிண் மிசைதனில் அடைவோர்
கழிந்த தோர்இடை யூற்றினால் மீட்டும் அக்கதியில்
விழுந்த எனத் துன்பொடு நின்றனன் வீழ்வுற்று
எழுந்ததானையை இழந்திடும் அவுணருக்கு இறைவன்

335
அனைய தன்மையில் நின்றிடும் அவுணர்கோன் ஆற்றச்
சினமது எய்திஎன் படையெலாம் சிதைந்தபா லனையும்
தனிமை செய்துபின் வெல்வன்என்று உளங்கொடு தழற்கண்
முனைவன் நல்கிய தேரினை நோக்கியே மொழிவான்

336
கொச்சகத்து இயல் குதலைவாய் மதலைபாற்  குழீஇய
வச்சி ரத்துெயு றுடையவெம் பூதரை வயின்சூழ்
கைச்சி லைத்திறல் வீரரைக் கவர்ந்துபோய் அண்டத்து
உச்சி யில்கொடு வைத்தனை இருத்திஎன் றுரைத்தான்

337.
உரைத்த காலையில் நன்றென வினவியே ஓடித்
கிருத்த கும்திறல் வாகுவை முதலினோர் திறத்தைக்
கிருத்தி மப்பெரும் தானையைக் கிளையொடும் வாரிக்
கருத்தை மாமயல் செய்தது கைதவன் கடுந்தேர்

338
கையர் தன்மையில் கடற்படை முழுவதும் கவர்ந்து
ையல் சிந்தையில் செய்துகன் வயினிடைத் தாங்கி
ஒய்யெனச் சென்று மூதண்ட கோளகை உளிப்போய்
வெய்ய வன்பணி ஆற்றிஆண் டிருந்தது வியன்தேர்

339
நிமலன் அவ்வழித் தானைஅம் பெரிங்கடல் நீங்கத்
தமியன் நின்றனன் ஆங்கது தகுவர்கோன் காணா
நமது தேர்வலி நன்றென உவகையால் நகைத்தான்
அமரர் அச்செயல் நோக்கியே பின்னரும் அயர்ந்தார்

340
சூர்இ டத்தது சூழ்ச்சியும் துணைவர்கள் தம்மைப்
பாரி டத்தொடு முகந்து எழீ மாயையில் படர்ந்த
தேரி டத்துஇயல் வன்மையும் ஆங்ஙனம் தெரிந்தான்
நேரி டப்பிறர் இன்றியே தமியனாம் நெடியோன்

341
கண்டு சீறிஓர் கார்முகம் வாங்கியே கடிதுஓர்
திண்தி றற்கணைபூட்டிநம் சேனையைப் பற்றி
அண்ட கோளகை புக்குறும் அடுமுரண் தேரைக்
கொண்டு வல்லையுன் வருகென விடுத்தனன் குமரன்

342
விடும்த னிக்கணை வேல்எனச்சென்றுவில் வீசி
இடம்தி கழ்ந்திடும் ஏழ்வகை உலகமும் இமைப்பிற்
கடந்து மற்றுள பதங்களும் நீங்கிஓர் கணத்தில்
தொடர்ந்து மூதண்ட கோளகை புகுந்தது துன்னி

343
துன்னி வெஞ்சரம் மாயமான் தேர்வலி தொலைச்சி
அன்ன தைக்கொணர்ந்து ஒல்லையின் மீண்டுளது அம்மா
மின்னு லாய்நிமிர் எழிலியை விண்ணினும் பற்றி
இந்நி லத்தினில் கொடுவரும் மாருதத்து இயல்போல்

            வேறு

344
வெம்திறல் நெடும்கணை மீண்டு ஞாலமேல்
இந்திர ஞாலமாம் இரதத் தைக்கொடு
கொந்துஅவிழ் மாலைவேற் குமரன் தன்முனம்
வந்தது வானவர் வழுத்தி ஆர்ப்பவே

345
முப்புரம் முடித்தவன் முருகன் தன்கணை
இப்புவி வருதலும் இலக்கத் தெண்மரும்
ஒப்பரும் இளவலும் ஒல்என் பூதரிம்
குப்புறல் உற்றனர் கொடியவன் தேரினும்

346
குதித்தனர் புடவியில் குமர வேள்இரு
பதத்திரு மலர்தனைப் பணிந்து பன்முறை
துதித்தனர் புடையராய்த் துன்னி நின்றனர்
கதித்திடு பேர்அருள் கடலின் மூழ்கியே

347
ஆவதோர் காலையில் அகிலம் யாவுமாம்
மூவிரு முகனுடை முக்க ணான்மகன்
வாவுஇயல் ழனபர்புடை  மாயத் தேர்தெரீஇத்
தேவர்கள் பரசுற இநைய செப்புவான்

348
தொல்லையில் வரம்பெறு சூரன் தன்புடை
செல்லலை ஆங்கவன் முடிகை திண்ணமால்
மல்லல்அம் திருவுடை மாயத் தேரைநீ
நில்இவண் என்றனன் நிகரில் ஆணையான்

349
ஆண்டுஅது வினவுறா அவுணர் கோன்புடை
மீண்டிடல் அஞ்சியே மேலை வந்ணைபோய்
மாண்டிடல் பிறப்பிலான் மதலை மாடுறப்
பாண்டில்அம் தேர்அது பணியில் நின்றதே.

350
்ண்டம்அது அடைந்ததேர் ஐயன் வாளியால்
மண்டலம் இழிந்துதன் மருங்கு றாததம்
எண்தகு பூதரும் யாரும் மீண்டதும்
கண்டனன் ்வுணர்கோன் கனலில் சீறினான்

351
அன்னது  காண்டலும் அவுணன் ஆங்கொரு
கொன்நெடும் சிலையினைக் குனித்து வல்லையில்
பன்னிரு கரமுடைப் பண்ண வன்மிசை
மின்நிகர் பகழிகள் மீட்டும் வீசினான்

352
மாசறு கங்கைதன் மதலை அவ்வழி
காய்சினம் கொண்டுஒரு கார்முகம் வளைஇ
ஆசுக மாரிபெய்து அவுணர் கோமகன்
வீசிய கணையெலாம் விலக்கினான் அரோ

353
கையனும்  அத்துணை காய்சினம் கொளீ
ஒய்யென எந்தைதேர் உய்க்கும் வன்மையோன்
மெய்இடம் எங்கணும் வெளியுறா வகை
செய்யன பகழிகள் செறித்துப் போர்செய்தான்

354
பொருந்தலன்  கணைபடப் புலம்பிக் காற்றினோன்
வருந்தினன் மயங்கினன் மாக்கள் தூண்டலன்
இருன்தனன் வறிதுஅவன்  இயற்கை யாவையும்
தெரிந்தனன் குமரவேள் அருளின் செய்கையால்

355
கண்டிடு முருகவேள் கணைகள் ஆயிரம்
விண்தொடர் செலவினால் விடுத்து வெய்யசூர்
கொண்டிடு சிலையினைக் குறைத்துப்பல்பெரும்
துண்டமது ஆக்கினான் அமரர் துள்ளவே.

          வேறு

356
கைச்சிலை முரியச் சூரன் கண்ணுதற் பெருமான் தந்த
முச்சிகைப் படைஒன் றேந்தி முடங்குளை ஊர்தி தன்னை
உச்சியில் தீபம்சூடும் உலகுடை ஒருவன் ஊர்ந்த
அச்சுறு தடம்தேர் முன்னர்அணுகுறத் தூண்டிச் சென்றான்

357
தூண்டிய அரிமான் ஏறு சூரனது உளத்தில் போந்து
மாண்தகு தனது தீய வள்உகிர்க் கரத்தால் எந்தை
பாண்டில்அம் தேரை ஆற்றும் பரித்தொகைபதைப்பமோதி
ஆண்டுஅயல் நின்ற பூதர் அலமர ஆர்த்த தன்றே

358
அன்னது பொழுது தன்னில் அரிமிசைச் சென்ர  சூரன்
தன்னுடைய வலங்கை கொண்டதனிப்பெருமஞ் சூலம்தனனைப்
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவன்மேல் தரிந்து வீச
மின்என நிலவு கான்று விண்வழிப் படர்ந்த தன்றே


359
நீடிய சூலம் செல்ல நிமிர்ந்தன எழுந்து செந்தீக்
கூடின அசனி ஈட்டம் குழீஇயின படையின் கொள்ளை
ஆடியல் கணங்கள் ஈண்டி ஆர்த்தன அதனைநோக்கி
ஓடினர் அமரர் ஆனோர் உலகெலாம் வெருவிற் றம்மா

360
அண்ணலும் அதனை நோக்கி ஆயிர கோடி வாளி
கண்அகன் சிலையில் பூட்டிக் கதுமென எதிர்கந் துய்ப்பத்
துண்ணென அவற்றை எல்லாம் சூலவேல் துணித்து  வீட்டி
நண்ணலன் வெகுளித் தீயின் உருவென நடந்த தன்றே

361
நடத்தலும் முகம்ஆ றுள்ளோன் ஞானநா யகன்ஈந் துள்ள
படைத்திறல் வன்மைஉன்னிப் பாணிஒன்று அதனின்மேவி
அடுத்திடு குலிசந் தன்னை அடையலன் உய்த்த சூலம்
பிடித்தனை வருதி யென்று பேசினன் செல்ல விட்டான்

362
விட்டிடு கின்ற எல்லை விய்பெரும் கிலிசம் ஏகி
நெட்டழற் சிகைமீக் கான்று நிமிர்ந்திடு சூலந் தன்னைக்
கிட்டுத லோடும் பற்றிக் கிளர்ந்தமுத் தலையும் கவ்வி
ஒட்டலன் சிந்தை உட்க ஒய்யென மீண்டதன்றே

363
முத்தலைப்படையைக் கொண்டு முரண்மிகு குலிசம் செவ்வேள்
கைத்தலம் உய்த்துத் தானும் கதுமெனஇருந்த தம்மா
பைத்தலைப் பாத்தன் போற்றும் பருவரைச் சிகரம் மூன்றும்
இத்தலப் புணரி தன்னில் இடும் மருந்து இயற்கை யேபோல்

364
ஆண்டுஅது காலை தன்னில் அறுமுகத்துஐயன் கையில்
தூண்டிய குலிசத்தோடு சூலமும் வருத லோடும்
காண்தரும் அமரர் எல்லாம் கரதலம் உச்சி கூப்பி
ஈண்டுஇவன் தன்னை அட்டே எமை அளித் திடுதி யென்றார்

365
என்னலும் எந்தை கேளா இராயிறம் பகழி பூட்டி
ஒன்னலன் ஊர்ந்து செல்லும் ஒரு பெரு மடங்கள் ஏற்றின்
எசன்னியில் அழுத்த லோடும்  சேண்கிளர்ந்து அரற்றி வீழ்ந்து
தன்னுயிர் ஒல்லை வீந்து தரைஇடைப்பட்ட தன்றே
366
ஊர்தியது இறந்து வீழ ஒருதனிச் சூரன் காணாப்
பார்தனிற் பாய்ந்து நின்று பராபரன் செம்மல் கையில்
கூர்தரு சூலம் போன கொள்கையும் தெரிந்து பின்நாட்சேர்தரு
வடவை யென்னச் செயிர்த்துஇவை சிந்தை செய்வான்

367
தேரொடு படையை வௌவித் திறல்உடை மடங்கலி சிந்தி
நேரலன் வலியனேபோல் நின்றனன் அனையன் தன்னைச்
சாரதர் தொகையை ஏனைத் தலைவர்கள் நம்மை எல்லாம்
ஓர்உருக் கொண்டு யானே விழுங்குவன் ஒல்லை என்றான்

368
எந்றிவை மனத்தில் உன்னி இணையறு மாயை நீரால்
நின்றுள அவுணர் செம்மல் நேமியம் புள்ளே போல
ஒன்றொரு லடிவம் எய்தி ஒலிதிறைக் கடலில் ஆர்த்துத்
தன்துணைச் சிறகர் பெற்ற தனிப்பெரும் கிரிபோ லுற்றான்

369
கறைஅடித் தந்தி சிந்தும் காய்சின அரிமேல் உய்க்கும்
நறைஅடிக் கமலத்து ஐயை ஞாட்புஇடை ஆடற்கொத்த
பறைஅடுத் திட்ட தேபோல் படுமகன் உடலம் விள்ளச்
சிறை அடுக் கொண்டு தீயோன் சேண்இடை எழிதலு ற்றான்

370
மண்இடை வரைப்பு முற்றும் மணிச்சிறை அதனால் மூடி
விண்ணிடைப் பரிதி ஒல்வான் விலக்கியே சுழலும் வேலைக்
கண்ணிடைப் பெருமீன்குப்பை கவர்ந்திட ஊக்கிற்றென்னத்
 துண்ணெனப் பூதர் தானைச் சூழல் புக்கு எறியுமாதோ


371
அடித்திடும் சிறகர் தன்னால் அளவையில் பூதர் தம்மைப்
பிடித்திடும் புலவு நாறும் பெருந்தனி மூக்கிற் குத்தி
மிடற்றிடைச் செறிந்து மெல்ல விழுங்கிடும் விறல்வே லண்ணல்
கொடித்தடம் தேரைச சூழும் கொடிய புள் வடிவக் கூட்டம்

372
சுற்றிடும் குமரன் தேரைச் தூண்டிய வலவன் தன்னை
எற்றிடும் கொடிஞ்சி எஞ்ச இறுத்திடும் பரிகள் தம்மைக்
குற்றிடும்  மூக்கின் சென்னஇ கொய்திடும் குழீஇய வீரர்ப்
பற்றிடும் படைகல் முற்றும்  பறித்திடும் முறித்து வீசும்

373
இத்திறம் அவுணர் செம்மல் இரும் சிரைப் புள்ளதாகி
அத்தலைக் கறங்கி வீழ்வுற்று அந்தரம் திரிதலோடும்
முத்தியை உதவும் தோள்தாளஅ மூவிரு முகத்தன் காணாக்
கைத்தலும் புடைத்து நக்கு  நன்று இவன் கற்பிது என்றான்

374
எறித்தரு சுடர்வே லண்ணல் இம்மென வெகுண்டு போரிலி
நிறுத்திய மேரு என்ன நிமிர்ந்த தோர் வரிவில் வாங்கி
விறல்கணை அநந்த கோடி  மிசைமிசை கடிது பூட்டித்
நிறத்தியல் புள்ளாய்ச் சூழும் அவுணன் மேல் செல்ல உய்த்தான்

375
நெறித்திகழ் பகழி மாரி நிமலன் விட்டிடலும் வெய்யோன்
சிறைப்புடைக் கொண்டு பாங்கிற் சிந்திட அவற்றை மோதிக்
குறைத்திடும் துண்டம் தன்னாற் கொய்திடும் தாளிற் பற்றி
முறித்திடும் கிளர்ந்து வானம் முழுவதும் சுழன்று செல்லும்

 376
வேலைகள் எல்லை முற்றும் படர்ந்திடும் விராவி மேவும்
ஞாலமது அகலம் முற்றும் படர்ந்திடும் நாகர் வைகும்
வாலிய உலகம் முற்றும் படர்ந்திடும் வந்து பூத
சாலமது எறிந்து கவ்வித் தலைத்தலை மயங்கிச் செல்லும்

377
சூரன்மற் றினைய ஆற்றால் சுலாய்க்கொடு தரித லோடும்
பூரணன் அதனைக் காணாப் புள்ளெனப் பெயர்வான் தன்னை
தேரொடும் தொடர்ந்து கோறல் பழியெனச் சிந்தை செய்து
வாரணன் உயர்ந்தோன் தன்னை நோக்கினன் வானோர் தம்முன்

378
இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்பும் தன்மேல்
அந்தமில் அருள்வைத் துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்
சுந்தர நெடுங்கண் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி
வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்

379
நின்றிடும் மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலம் கிழிய மேருக்
குன்றமும் புறம்சூழ் வெற்பும் குலைந்திடக் கரிகள் வீழ
வன்றிரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞ்சத்
தன்துணைச் சிறகால் மோதி இனையன சாற்ற லுற்றான்

380
ஐயகேள் அமரர் எல்லாம் வழிபட அளியன் தன்பால்
செய்யபே ரருளை வைத்தாய் ஆதலின் சிறுமை தீர்ந்தேன்
உய்யலாம் நெறியும் கண்டேன் உன்னடி பரிக்கப் பெற்றேன்
பொய்யலாம் மாயவாழ்க்கைப் புன்மையும் அகல்வன் மன்னோ

381
அல்லல் செய்து எமரை எல்லாம் அரும்சிறைப் படுத்தி வீட்டிப்
பல்வகை உலகை ஆண்ட அவுணர்கோன்  பறவையாக்கை
செல்லுழிச் சென்று சென்று செருவினை இழைத்து வெல்வான்
ஒல்லையில் அடியேன் தன்மேல் ஏறுதி ஊர்தற்கென்றான்

382
என்னலும் உளத்திற் செல்லும் இவுளிமான் தேரின் நீங்கி
பன்னிரு நாட்டத் தண்ணல் படர்சிறை மயூரம் ஆக
முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி
ஒன்னலனஅ செலவு நோக்கி உம்பரில் ஊர்தலுற்றான்

383
ஆறுமா முகத்துஎம் அண்ணல் அசனிபோல் அகவிஆர்க்கும்
மாறுஇலா மயூரம் என்னும் வயப்பரி தனைந டாத்த
ஈறுசேர் பொழுதிற் சூழும் எரியினை அடுவான் மன்னிச்
சூறைமா ருதம்சென் றென்ன அவுணனைத் தொடர்ந்துசூழ்ந்தான்

384
ஆகிய பொழுது தன்னில் ஆழிஅம் புள்ளாய்த் தோன்றி
மாகமது உலவு கின்ற மாற்றலன் அதனை நோக்கித்
சீகர அளக்கர் என்னத் தெழித்துமேற் சென்று தாக்கக்
கேகய அரசன் தானும் கிடைத்துஅமர் புரிதல் உற்றான்

385
நிறம்கிளர் பசலைத் துண்டம் தீட்டியே யாக்கை முற்றும்
மறங்கொடு கீண்டு செந்நீர் வாய்ப்படக் கவ்வி வாங்கிப்
புறங்கிளற் சிறைகள் தம்மாற் புடைத்து வெம்காவில் தாக்கிப்
பிறங்குபுள் உருவமானோர் இவ்வகைப் பெரும்போர் செய்தார்

386
இத்திறம் பொருதகாலைப் பிளிமு கத்து ஏந்தல் தன்னைப்
பைந்தலை உடைய தூவி பறத்திடா வதன முற்றுங்
குத்திவெங் குருதி வீட்டிக் குருமணிக் கலாபம் ஈர்த்து
மெய்த்துயர் புரிந்தான் நேமிப் புள்ளுருக் கொண்ட வெய்யோன்

387
அச்செயல் முருகன் காணா ஆர்அழல் என்ன நக்குக்
கைச்சிலை அதனை வாங்கிக் சுடும்தொழில் அவுணர் மன்னன்
உச்சியில் முகத்தில் காலில் உரத்தினில் சிறைகள் தம்மில்
வச்சிர நெடும்கண் வாளி வரம்பில  கொடுத்து விட்டான்

388
விட்டிடு கின்ற வாளி வெய்யவன் அங்கம் எங்கும்
பட்டிடு கின்ற காலைப் பதைபதைத்து உதறிச் சிந்தி
எட்டுள திசையும் வானும் இருங்கடல் உலக மெங்கும்
கட்டழல் சிந்திச் சீறிக் கறங்கெனத் தரியா நின்றான்

389
தரின்திடு கின்ற காலைச் செம்சுடர்த் தனிவேல் அண்ணல்
புரந்தரன் உரிவாய் நின்ற பொறிமயில் நடாத்தி ஏகி
அரம்தெறு கணைகள் தூண்டி அகிலமும் அவுணன் தன்னைத்
துரந்துஅமர் இழைக்க லுற்றான் விண்ணவர் தொழுது போற்ற

390
அத்தகும் எல்லை தன்னில் அவுணர்கள் எவர்க்கும் மேலோன்
எய்த்துஉளம் மெலிந்து சால இடர்உழந்து இரக்கம் எய்தி
மெய்த்தழல் என்னச் சீறி வேற்படை கொண்ட செம்மல்
கைத்தலத்து இருந்த வில்லைக் கறிப்பது கருதி வந்தான்

391
வருவது நிமலன் காணா மலர்க்கரம் ஒன்றில் வைகும்

ஒருதனி ஒள்வாள் வீசி ஒன்னலன்  பறவை யாக்கை
இருதுணி ஆகி வீழ எறிந்தனன் எறிதலோடும்
அரிஅயன் முதலாம் தேவர் அனைவரும் ஆடல் கொண்டார்

               வேறு

392
தார்ஆர் வாகை சூடுய வேலோன் தன்கையில்
கூர்ஆர் வாளால் புள்உரு வத்தைக் குறைவிக்கச்
சூராம் வெய்யோன் அண்ட முகட்டைத் தொடஓங்கிப்
பாராய் நின்றான் விண்ணவர் யாரும் பரிவெய்த

393
ஏழுஉட் பட்ட ஆழ்திரை நேமி  இடைதூர்த்துத்
தாழ்விற் செல்லும் ஆதவர் தேரைத் தடைசெய்து
சூழிக் கால்கள் வான்நெறி செல்லும் துறைமாற்றிப்
பாழித் திக்கை மூடினன் நின்றான் படி ஆனோன்

394
ஆறுஆர் சென்னிப் பண்ணவன் மைந்தன்
சீரா நன்றால் சூர்புரி மாயத் திறன்என்னாக்
கூறா அங்கைச் செஞ்சிலை தன்னைக் குனிவித்தே
ஊறுஆர் வெங்கோல் ஏழு தொடுத்தே உரைசெய்வான்

395
கெடுவா னத்தின் காறும் எழுந்தே நிமிர்வுஎய்தி
முடிவான் வெய்யோன் பாரக மாய்என் முன்நி்றான்
கடல்ஏழு என்னும் தன்ணையின் நீவிர் கடிதுஏகி
அடுவீர் என்றே விட்டநன் யார்க்கும் அறிவுஒண்ணான்

396
ஒற்றைச் செவ்வே லோன்விடு வாளி உலகெல்லாஞ்
சுர்றிக் கொண்டே உண்டிடும் நேமித் தொகைபோலாய்க்
செற்றத்தோடும் ஆர்ப்பொடும் ஏகித் திரைவீசி
மறறச் சூரன் தன்உரு வத்தை வளைவுற்ற

397
வளையா வெஞ்சூர் மாயிரு ஞால வடிவத்தைக்
களையா உண்டே இன்மைய தாக்கிக் கணைஏழும்
திளையார் நீத்தத் தொல்லுரு நீங்கிச் செருவிற்கண்
விளையா டுற்ற எம்பெரு மான்பால் மீண்டுற்ற

398
காணா வெய்யோன் பார்உரு நீங்கிக் கடல்ஏழும்
ஊணா வையம் வானொடும் உண்டற்கு எழுமாபோல்
எண்ஆர் நீத்தத்து ஓர்வடி வாகி இறைமுன்னம்
நீள்நாகத்தின் காறும் நிமிர்ந்தே நின்றிட்டான்

399
நேரான் மாயத் தொல்லுரு வத்தின் நிலைநோக்கிக்
கூரார் வாளி நூறு தொடுத்தே கொடியோன்பால்
சேரா ஊழித் தீயியல் பாகிச் செறிவுற்றுப்
பேரா தட்டே வம்மென விட்டான் பெயர்வுஇல்லான்

400
அவ்வா றாக வாளிகள் நூறும் அருள்நீரால்
வெவ்வாய் அங்கிப் பேர்உரு வாகி விரவிப்போய்த்
தெவ்வாய் நின்றோன் நீத்தம தாகும் செயல்நீங்க
எவ்வா யும்சென்று உண்டந அம்மா இறைதன்னில்

401
தண்டாது ஆர்க்கிம் நீத்த இயற்கை தனைஎல்லாம்
உண்டு ஆலித்தே வாளிகள் மீண்டே உறுகாலைக்
கண்டான் மாயத் தன்மை படைத்தோன் கனல்மேனி
கொண்டான் அண்டம் காறும் நிமிர்ந்தே குலவுற்றான்

402
குலவும் காலைக் கண்டு நகைத்தே கூற்று என்ன
நிலவும் செங்கோல் ஆயிரம் வாங்கா நீடுழி
சுநவும் கண்டச் சூறையின் ஏகிச் சூர்மாயம்
பலவும் செற்றே வம்மென உய்த்தான் பரம்ஆனோன்

403
உய்க்கும் காலத்து ஒய்யென ஏகி உலகெங்கும்
திக்கும் வானும் சூழும் மருத்தின் திறன் எய்தி
மைக்கும் தூமம் போல்பவன் மெய்த்தீ வடிவெல்லாம்
பொய்க்கும் வண்ணம் சாடின ஐயந் புகர்வாளி

             வேறு
404
ழணஅடு உலாவரு வாகைஅம் தாரினால்
கொண்டு எழுந்த கொழும்தழள் யாக்கையை
உண்டு வாளிகள் ஒய்யென மீண்டுஒர ஆய்
அண்டர் நாயகன் பாங்கர் அணைந்தவே

405
ஆங்குஅவ் எல்லையில்அவ்வடு வத்தினை
நீங்கும் மாற்றலன் நீள்சினம் மேற்கொள
ஓங்கும் ஓதை உருவுகொண்டு ஆர்த்தலும்
ஞாங்கர் எந்தை நகையோடு நோக்கினான்

406
ஆய்ந்து வாளி ஓராயிர நூற்றினை
வாய்ந்த கைக்கொடு மாற்றலன் வன்மையைப்
பாந்தள் ஆகிப் படுத்துவம் மோஎனா
ஏந்தல் கூறி இமைப்பினில் தூண்டினான்

407
அவ்அ யில்கணை அந்தரத் திற் செலாச்
செவ்வி திர்கிளர் செந்தழல் போல்எழீஇப்
பைவி ரிந்த பஃறலைப்பன்னக
வெவ்வு ருக்கொடு சூர்மிசை மேயதே

498
கூற்றம் அன்ன கொடும்தொழில் மன்னவன்
கார்ரிந் யாக்கை கரப்ப மிசைந்திடா
ஆற்றல் மேவி அணைந்துடன் மீண்டன
வேல்த டக்கை விமலன் புடைதனில்

409
இன்ன தன்மையில் ஈரிரு நாள்வரைத்
துன்ன லன்தொலை யாதுஅமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னி யேபல் உருக்கொடு தோன்றினான்

          வேறு

410
ஓவாஇயல் புரிமூவரில் ஒரிசார்வரும் ஒழியும்
தேவாசுரர் பிறராம்என ஒருசார்வரும் சேண்ஆள்
கோஆம்என ஒருசார்வரும் ஒருசார்வரும் குறல்போல்
ஆஆெனக் கொடும்கூற்றென ஒருசார்வருமன்றே

411
பேயாம்என ஒருபால்வரும் பிறழ்வெம்புகைப் படலைத்
தீயாம்என ஒருபாலவரும்  திசை எங்கணும் சுழலும்
ஓயாமருந் தினம்ஆம்என ஒருபாலிவரும்அகிலம்
பாயாஎழு துரைஆழியின் ஒருபால் வரும் பரவி

412
ஒருசார்விடம் என வந்திடும் ஒருசார் வரும்பனிபோல்
ஒருசார்முகில் என வந்திடும் ஒருசார்வரும் இருள்போல்
ஒருசார்உரும்  எனவந்திடும் ஒருசார்வரும் வரைபோல்
ஒருசார்தனது உருவாய் வரும் ஒருசார் வரும் கதிர்போல்

413
தொக்குஆர்பல படையாம்என ஒருசார்வரும் சூழும்
திக்கு ஆர்களிற்று இனமாம்என ஒருசார்வரும் சினத்தால்
நக்குஆர்தரும் அரிஏறுஎன ஒருசார் வரும் நலிவால்
அக்கால்வரு தனிப்புள்எந ஒறுசார்வரும்
414
 கரியின்முகத் துணைவனென ஒருசார்வரும் கடுங்கண்
அரியின் முகத்து இலையோந்எந ஒருசார் வரும் அளக்கரப்
பரியின்முகத்த தினில் வந்திடு பாழிக்கனல் படுக்கும்
எரியின்முகத் தனிமைந்தனில் ஒருசார் இடை ஏகும்

415
எல்லோன்தனை வெகுண்டோன் எந ஒருசார் வரும் ஏனைச்
சொல் ஓங்கிய திறல் மைந்தரில் ஒருசார்வரும் சூழ்ச்சி
வல்லோன் என ஒருசார்வரும் மானப்படைமன்னர்
பல்லோர்களும் செறிந்தால்ென ஒருசார்இடைப்படரும்

416
இத்தன்மையில் அவுணர்க்குஇறை யாண்டும் செறிவாகி
அத்தன்தனைப் புடைசூழ்தலும் அவைநோக்கிய இமையோர்
சித்தம் தளர்ன்து இரிகுற்றனர் திரிகுற்றனர் அம்மா
கத்தும்கடற் புவிமாய்ந்திடு காலத்துஉயிர் எனவே

                          வேறு
417
 அங்கு அதன் நிலைமை நோக்கி ஆயிரகோடி வாளி
 செங்கையில் வாங்கி வாங்கும் திருநெடும் சிலையில்பூட்டி
 இங்குள அமரர்தங்கள் இருஞ்சிறை அகற்றவந்து
 பங்கயற் சிறைசெய் திட்ட பகவன்மற் றிதனைச் சொல்வான்

418
தெவ்அடு பகழி என்னும் தேவிர்கள் நீவிர் ஏகி
மெய்வலி படைத்து நின்ற மேவலன் ஒருவன் கொண்ட
அவ்உரு அனைத்தும் எய்தி ஆங்கவன் மாயம் முற்றும்
இவ்விடை அட்டு நீங்கிஏகுதிர் என்று விட்டான்

419
விட்டிடு சிலீ முகங்கள் விரைந்து போய் வெகுளி வீங்கி
ஒட்டலன் கொண்ட ஒவ்வொன்று உருவினுக்கு எழுமை ஆகி
எட்டுள புலமும் வானும் இருநில வரைப்பும் ஈண்டி
அட்டுஅடல் பெற்ற அம்மா அனையவன் மாயம் தன்னை

420
உடல்சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்
அடல்வலி கொண்ட வாளி  அந்தர நெறியால்  மீண்டு
புடைஉறு சரங்களோடு பொன்எனத் தூணி புக்க
சுடர்நெடும் தனிவேல் அண்ணல் அவன்முகம் நோக்கிச் சொல்வான்

421
வெம்புயல் இடையில் தோன்றி விளித்திடும் மின்னு என்ன
இம்பரில் எமது முன்னம் எல்லைஇல் உருவம் கொண்டாய்
அம்பினில் அவற்றை எல்லாம் அட்டனம் அழிவில்லாத
நம்பெரு வடுவம் கொள்வம் நன்றுகண் டிடுதி என்றான்

422
கூறிமற் றினைய தன்மை குராகடல் உலகம் திக்கு
மாறிலாப் புவனம் அண்டம் வானவர் உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்த தன்றி
வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவம் கொண்டான்

423
உள்அடி வரைகள் யாவும் ஒண்புறம் அடியில் நீத்தம்
வுள்உகிர் விரல்கள் முற்றும் வான்உரு மேறு நாள்கோள்
எள்அரும் பாடு தன்னில் இரும்புனற்கு இறைவன் சோமன்
நள் இருள் அநைய மேனி நிருதியோடு அரக்கர் நண்ண

424
உடிதிரள் கணைக்கால் தன்னில் ஆரிடர் மணிகள் சானு
வடிவுஅமை முழந்தாள் விஞ்சை வானவர் ஆதியானோர்
தொடைதனில் மகவான் மைந்தன் தொடைமுதல் நடுவன் காலன்
கடிதடத்து அசுரர் பக்கம் கடவுளர் யாரும் நிற்ப

425
இருப்பினில் நாகர் கோச எல்லையில் மருந்தே உந்திக்
கருப்படும்உயிர்கள் மார்பில் கலைகள்முன் னூலில்போதம்
அருப்புஅயில் உரோமத்து அண்டம் அங்கையில் அகில போகம்
திருப்பெரும் தடந்தோள் வைப்பில்செங்கண்மால் விரிஞ்சன் மேவ

426
மெல்இதழ் அனையசெங்கை விரல்மிசை அணங்கின் நல்லார்
ஒல்ஒலி அங்கி கண்டம் ஒப்பிலா மணிவாய் வேதம்
பல்ிடைஎழுத்து நாவில்பரமஆ கமத்தின் பேதம்
நல்இதழ் மனுவின் விஞ்சை நாசியில் பவனன் மன்ன

427
கருணைகொள் விழியில் சோமன் கதிரவன செவியில் திக்குத்
திருநுதல் குடுலை வைப்புச் சென்னியில் பரம ஆன்மா
மரபினில் மேவித் தோன்ற மாறிலாது இருக்கும் தொல்லை
ஒருதனது உருவம் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார்

428
செஞ்சுடர் அநந்த கோடி செறிந்தொருங்கு உதித்த தென்ன
விஞ்சிய கதிர்கன்றுள்ள விய் பெரு வடிவை நோக்கி
நெஞ்சகம் துளங்கி  விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி
அஞ்சன்மின் அஞ்சன் மின்என் றருளினன் அமைத்த கையால்

429
அண்டர்கள் யாரும் எந்தை அருள் முறை வினவி உள்ளம்
உண்டிடு விதிர்ப்பு  நீங்கி உவகையால் தொழுது நின்றார்
தண்துளி வரைய தென்னத் தணப்பறச் சிதறும் ஊழிக்
கொண்டலின் தோற்றம் குலவுறும் மஞ்ஞையேபோல்

430
இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவம் தன்னைக்
கறைவிடம் உறழும் சூரன் கண்டுவிம் மிதத்தில் நிற்ப
அறிவரிம் உணர்தல் தேற்றா ஆறஉமாமுகத்து வள்ளல்

சிறிது நல் லுணர்ச்சி நல்க இனையன செப்ப லுற்றான்

431
எண்இலா அவுணர் தானை யாவையும் இமைப்பில் செற்று

வி்ண்உலா அண்டம் தோறும் வியன்சமர் ஆற்றி என்பால்
நண்ணினார் தம்மை எல்லாம் நாம்அறத் தடிந்து வீட்டி
வண்ணமான் தேரும் மீண்டு வராநெறி தடுத்தான் மன்னோ

432
திண்திறல் உடையேன் தூண்டும் திறல் படை யாவும் நீக்கிக்
கொண்டஎன் மாயம் முற்றும் கொடும்சரம் அதனால் மாற்றி
அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவும் தன்பால்
கண்டிடும் வடிவம் ஒன்று காட்டி என் கண்முன் நின்றான்

433
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலன்என்று இருந்தேன் பரிசுஇவை உணர்ந்தி லேன்யான்
மால்அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா றணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ

434
ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிகல் இன்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாம் துணிபுஎனக் கொண்டி லேனால்
இற்றைஇப் பொழுதில் ஈசன் இவன்எனும் தன்மை கண்டேன்

435
மீஉயர் வடிவம் கொண்டு மேவிய தூதன் சொற்ற
வாய்மைகள் சரதம் அம்மா மற்றுயான் பெற்ற அண்டம்
ஆயவை முழுதும் மற்றும் அறுமுகம் படைத்த செம்மல்
தூயபொற் பதரோ மத்தில் தோன்றியே நிற்கு மன்றே

436
அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவம் முற்றும் குறித்துயார் தெரிதசற் பாலார்
எண்தரு  விழிகல் யாக்கை எங்கணும் படைத்தோர்க் கேனும்
கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கு மன்றே

437
சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவம் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் ல்லாம்
ஆர்க்குள உலகில் அம்மா அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் திவிட்டிற் றில்லை இன்னும் என் பார்வை தானும்

438
நேர்இலன் ஆகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேர்உரு அதனை நோக்கிப் பெரிதும்அச் சுறுவ தல்லால்
ஆர்இது நின்று காண்பார் அமரரில் அழிவி லாத
சீரிய வரங்கொண் டுள்ளேன் ஆதலின் தெரிகின்றே னால்

439
ஆயிரகோடி காமர் அழகெல்லாம் திரம்டொன் றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்
தூயநல் எழிலுக்கு ஆற்றாது என்றிடில் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்

440
இங்கெனது உயிர்போ லுற்ற இளவலும் இநைய சேயும்
செங்கையில் வேலோன் தன்னைச் சிறுவனென்று எண்ணல் கண்டாய்
பங்கயன் முதலோர் காணாப் பரமனே யாகும் என்றார்
அங்கவர் மொழிந்த வாறும் சரதமே ஆனதன்றே

441
அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடஇயின் காறும்
எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி னாஸும்
கண்ணினால் அடங்காது உன்னின் கருத்தினால் அடங்காது என்்பால்
நண்ணினான் அமருக்குஎன்கை அருலென நாட்ட லாமே

442
திருகிய வெகுளிமுற்றும் தீர்ந்தன செருவின் ஊக்கம்
அருகியது உரோமம் புள்ளி யாயின விழியில் தூநீர்
பெருகியது இவன்பால் அன்பு பிறந்தன தமியேற்கு உள்ளம்
உருகியது என்பு தானும் உலைமெழு காகும் அன்றே

443
போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன புவனம் எங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கி்ன்ற விண்ணோர்
நாயகன் வடிவம் கண்டேன் நற்றவப் பயன்ஈ தன்றே

444
சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அம்மா
தாழுதவ் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலு
ஆழுதல் வேண்டும் தீமை அகன்றுநான் இவற்கு ஆளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே

445
ஒன்னலார் பொருட்டால் ஏகி உறுசமர் இழைத்த செம்மல்
தன்உரு அதனைக் காண்கில் முனிவதே தகுதி யாகும்
வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலிஅழிந்து உருகிற்று என்றான்
என்னுடை வயத்த அன்றோ உணர்ச்சியும் யாக்கை முற்றும்

446
ஏடவிழ் அலங்கல் மார்பன் என்உடன் இந்நாள் காறும்
நீடிய இகல்போர் ஆறஅறி நீங்கலான் நின்ற தெல்லாம்
ஆடலின் இயற்கை என்றே ்றிந்தனன் அஃதான்ரு அன்னான்
சாடிய வேண்டும் ன்னின் யார் அது தாங்கற் பாலார்

447
ஏதமில் அமரர் தம்மை யான் சிறை செய்த தெல்லாம்
தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே
வேதமும் அயனும் ஏநை விண்ணவர் பலரும் காணா
நாதந்இங்கு அணுகப்பெற்றேன் நன்றதே ஆன தன்றே

448
ஒன்றொரு முதல்வன் ஆகி உறைதரு மூர்த்தி முன்னம்
நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா
நன்றிஓர் பெருமை பெற்றேன் வீரனும் நானே யானேன்
என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்ப துண்டோ449

449
வான்உளோர் சிறையை நீக்கி வள்ளலை வணங்கி இந்த
ஊன் உலாம் உயிரைப் போற்றிஅளியர்போல் உறுவன் என்னில்
ஆனதோ எனக்கிது அம்மா ஆயிர கோடிஅண்டம்
போனதோர் புகழும் வீரத் தன்மையும் பொன்றி டாவோ

450
என்னஇத் தகைய பன்னி நிற்றலும் எவர்க்கும் மேலோன்
உன்னரும் தகைத்தாய் நின்ற ஒருபெரும் தோற்றம் நீத்து
மின்இவர் கலாபம் ஊர்ந்த வியன்உருக் கொண்டு நண்ணித்
துன்னலன் போதம் மாற்றித் தொன்மைபோ லாகச் செய்தான்

451
காரணன் ஆகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆர்உயிர் முழுதும் மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிக்
சூரனை மயக்கஞ் செய்யும் சூழிச்சியோ அரிய தன்றே.

452
அத்தகுப காலை தாநே அவுணர்கோன் உணர்ச்சி நீங்கிக்
சித்தமது இடையே தொல்லைச் சீற்றமும்  இகலும் உற்ர
மெய்த்தகு குழவித் திங்கள் விண்ணெறி செல்லச் செல்லும்
எத்திசை இருளும் அன்நது அகன்றுழி எழுந்த தேபோல்

453
பிணிமுகம் உயர்ந்து நின்ற பெருந்தகை தோற்றம் காணூஉத்
தணிவரிம் சினம்மேற் கொண்டு சமரின்மேல் ஊக்கம் சேர்த்தி
்ணியதுஎன் திண்மை என்னா அங்கையோடு அங்கை தாக்கி
மணிமுடி துளக்கி நக்கு மற்றிவை புகலல் உற்றான்

454
சேய்உரு அமைந்த கள்வன் செருவினை இழைக்கல் ஆற்றான்
மாயையின் ஒன்று காட்டி எனைஇவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆர்எனக்கு ஒப்புண்டு என்றும்
காயமது அழிவி லாதேன் கருத்துஅழி கின்ற துண்டோ

455
குன்றினை எறிந்து வேல்கைக் குமரனோடு அமரது ஆற்றி
வென்றிடு கின்றேன் மெல்ல மேல் அது நிற்க இந்த
வன்திறல் சமரை மூட்டி நின்ற வானவரை எல்லாம்
தின்றுஉயிர் குடித்து முன்என் சினம்சிறிது அகல்வன் என்றான்

456
ஆயது துணிவாக் கொண்ட அவுணர்கள் மன்னன் பின்னும்
தீயதோர் தொல்லை மாயச் சீர்கொள்மந் திரத்தைப் பன்னி
ஞாயிரும் மருட்கை கொள்ள ஞாலமும் ககனம் முற்றும்
மாஇருள் உருவங் கொண்டி மறைந்துநின்று ஆர்க்க லுற்றான்

457
தெண்திசை நேமி தன்னில் தீவிடம் ெழுந்த தென்ந
ெண்திசை ெல்லை முற்றும் இருநில வரைப்பும் எல்லா
அண்டமும் ஆகி ஈண்டும்  ஆர்இருள் வடிவை வானோர்
கண்டனர் அவுணன் மாயம் ஈதெனக் கலக்க முற்றார்

458
அத்துணை அவுணர் மன்னன் அள்இரு ளிடையே பாய்ந்து
பத்திகொள் சிகரம் அன்ன பல்தலை அளவை தீர்ந்த
கைத்தலம் உளதோர் யாக்கை கதுமெனக் கொண்டு விண்ணோர்
மெய்த்தொகை நுகர்வான் உன்னி விண்ணிடைக் கிளர்ந்து சென்றான்
459
ஆடுஇயல் கொண்ட சூரன் அந்தரத்து எழலும் வானோர்
கூடிய ஓதிதன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைச்
சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லாது
ஓடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்கலுற்றார்
460
நண்ணினர்க்கு இனியாய் ஓலம் ஞான நாயகனே ஓலம்
பண்ணவர்க்கு இறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற்கு அரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம
கம்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஓலம்ஓலம்
461
தேவர்கள் தேவே ஓம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்

462
கங்குலின் எழுந்த கார்போல் கனைஇருள் மறைவின் ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவு ம் நோன்மை இல்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையும்நீ தாழ்த்தல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டுஎம் ஆவியை அருளுக என்றார்

463
தேற்றலை போலும் ஈது சிறிதுநீ பாணிப் பாயேன்
ஆறறலின் மறைந்து நின்றே அகிலமும் தானே  உண்ணும்
மாற்றலன் ஆவி தன்னை வாங்குதி வல்லை என்னாப்
போற்றினன் முதல்வன் தன்னைமயூரமாய்க் கொண்ட புத்தேள்

464
அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலும் தெரிந்து செவ்வேள்
செம்கைஅ  தொன்றில் வைகும் திருநெடு வேலை நோக்கி
இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்
துங்கமது உடைய சீர்த்திச் சூரமேல்செல்லத் தொட்டான்

465
ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீஅழல் சிகழி கான்று சென்றிட அழுணன் கொண்ட
மாயிருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்ற தன்றே

466
அன்னவன் தனது மாயம் அழிந்ததும் ஐயன் வைவேல்
முன்னுறு மாறும் நோக்கி முடிவிலா வரத்தினேனை
என்இவண் செய்யும் அம்மா இவன்விடும் எஃகம் என்னா
உன்னினன் முறுழல் எய்தி உருகெழு சீற்றங கொண்டான்

467
வாரிதி வளாகம் தன்னை மாதிர வரைப்பை மீக்கீழ்க்
சேருறூ நிலையம்தன்னைத் திசைமுகன் முதலாவுள்ள
ஆருயு ரோடும் வீட்டி அடுவன்மேல் இதனையென்னாச்
சூர்எனும் அவுணன் மற்றைச் தொடுகடல் நடுவண் ஆனான்

468
வன்னியின் அலங்கள் கான்று வான்தழை புகையின் னல்கிப்
பொன்னெந இணர்கள் ஈன்று மரகதம் புரையக் காய்த்துச்
செந்நிற மணிகள் என்னத்தீம்பழம் கொண்டு கார்போல்
துன்நுபல் சுவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்

469
மாசறு ககன கூட வரம்பதன் அளவு மேல்போய்
ஆசையின் எல்லை காறும அளவைநீர் உலவை ஓச்சிச்
காசினி அகலம் தாங்கும கச்சபத் துணைத்தூ ரோட்டிப்
பாசடை பொதுளி வெம்சூர் பராரைமால் வரையின்நின்றான்
470
ஓராயிரம் நூற தென்னும் ஓசனை அளவை ஆன்ற
பரரைமா உருவமாகிப்பலவுடைச் சினைமா்ண் கொம்பர்
விராவிய சூழ்ச்சி தன்னால் வேலைகள் முழுதும் விம்ணும்
தராதல வரைப்பும்ல்லாம் தம்ணிழல் பரப்பி நின்றான்

471
நெடுங்கலை முயல்மான் கொண்டு நிலவும் அம்புவியும் நீத்தம்
அடும் கதிர் படைத்த கோவும் அளகையை ஆளிதானும்
கடம்கலும் கின்ற ஆசைக் கரிகளும் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான்

472
மிக்குயர்உவணம் அன்னம் மிசைப்படும் எகினப் புள்ளும்
மைக்குயில் சேவலாகி  மயூரமாம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடற் பூவையும் கொடியதான
குக்குட முதலும் அஞ்சக் கொக்குரு வாகி நின்றான்

473
காலெனும் மொய்ம்பன் உட்கக் கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் எங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்
பாலர்மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவை மார்கள்
சேல்எனும் விழிகள் பொத்தச் சேகரம் ஆகி நின்றான்

474
அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவும்
தத்தமது இருப்பை நீங்கத் தாதவிழ் தீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான்

475
நிலமிசை நினைய வாறோர் நெடும் பெரும் சூத மாகி
உலவையின் செறிவு தன்னால் உம்பரும் திசையும் எற்றித்
தலைமுதல் அடியின் காறும்சாலவும் தளர்ந்து தள்ளுற்று
அலமகு வாரிற் தானே அசைந்தனன் அசைவி லாதான்

476
பைவிரி பாந்தன் புத்தேள் பரம்பொறாது அழுங்கப் பாரில்
மைவிரி படிவச் சூறை மாருதம் எறிய மாழை
மெய்விரி குடுமிக் கோட்டு மேருவெற்பு அசைந்தால் என்ன
மெய்விரி அவுணன் யாக்கை அலைத்தனன் முடிவ தோரான்

477
இடிந்தன சரிந்த ஞாலம் ஏழ்வகைப் பிலங்கள் முற்றும்

பொடிந்தன கமட நாகம் புரண்டன புழைக்கை மா்க்கள்
முடிந்தன மறிந்த வேலை முழுவதும் ஒன்றா குற்ற
மடிந்தன உயிரின் பொம்மல் வரைக்குலம் மறிந்த அன்றே

478
தாரகை உதிர்ந்த கோளும் தலைபனித்து இரிந்த வெய்யோன்
தேரொடு மாவும் தானும் தியங்கினன் திங்கட் புத்தேள்
பேருறு மானம் நீங்கிப் பெயர்ந்தநன் ஏனை வானோர்
மேருவும் கயிலை வெற்பும் புக்கனர் வெருவும் நீரார்

479
ஏர்றமில் சுவர்க்கம் முற்றும் இற்றன அதற்கும் அப்பால்
மேல்திகழ் முனிவர் வைகும் உலகமும் பகிர்ந்து வீழ்ந்த
நால்திசை முகத்தன் மாயோன் நண்ணிய உலகும் அற்றே
சாற்றுவது என்கொல் அண்டச் சூழலும் தகர்ந்தது அன்றே

480
தெண்திரை நடுவண் நின்ற தீயவன் செயலும் அன்னான்
கொண்டிடும் உருவும் உள்ளக் கொள்கையும் வலியும் சீரும்
அண்டர்கள் எவர்க்கும் மேலாம் ஆதியம் பகவன் தொட்ட
விண்தொடர் தனிவேல் காணா வெஞ்சினம்  விளைத்த தனறே

481
தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து
ஆயிர கோடி அண்டத் தங்கியும் ஒன்றிற் றென்ன
மீயுயர்ந் தொழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றங் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே

482
வயிர்த்திடும் நிலமை சான்ற வன்கணான் உயிரை வௌவச்
செயிர்த்திடு தெய்வச் செவ்வேல் திணிநில வரைப்பின் அண்டம்
அயிர்த்தொகை யாக ஏனைப் பூதமும் அழிய அங்கண்
உயிர்த்தொகை முருக்கத் தோன்றும் ஒருவனிற் சென்ற தன்றே

483
மாறுஅமர் உழந்து பன்னாள் வரம்பது பிரமம்ஆவார்
வேறிலை யாமே என்ற இருவரும் வெருவி நீங்க
ஈறொடு முதலும் இன்றி எழுகிரி விலக்கி விண்மேல்
சேறலின் நிலமை காட்டிப் படர்ந்தது கடவுட் செவ்வேல்

484
வேதனை அகத்தர் ஆகும் விண்ணவர் படைகள் தம்முன்
யாதனை இதற்கு நேரா இயம்புவது எரியில் தோன்றிப்பூ
பூதனை உயிருண் கள்வன் புண்டரீ கத்தன் வன்மை
சோதனை புரிந்த மேலோன் சூலமே என்ப தல்லால்

485
மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி ஏழும் மற்றைக்
தெண்திரைக் கடலும் வானும் சேணுயர் பிறங்கல் முற்றும்
எண்திசைப் புறமும் அண்டத்து ஏணியின் பரப்பும் ஈண்ட
ஒண்தழற் சிகையின் கற்றை உமிழ்ந்ததால் ஒருங்கு ஞாங்கர்

486
பற்றிய ஞெகிழி பாரிற் படர்ந்தந பௌவம் யாவும்
சுற்றிய திசையும் வானும் சூழ்ந்தன சோதி வைகும்
பொற்றையது ஒன்றே அல்லாப்பொருப்பெல்லாம்செறிந்த பொன்தோய்
கற்றையம் கதிரின் அண்டச்  சூழலும் கதுவு கின்றன
487
விடம்பிடித்து அமலன் செங்கை வெம்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் னியற்றி அன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு  உருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட  வெம்சூர் மாமுதல் தடுந்தது அன்றே
488
ஆடல்வேல் எறிதலோடும் ஆமிர வடிவாய் அண்ட
கூடமும் அலைத்தகள்வன் அரற்ரொடு குறைந்து வீழ்ந்தும்
வீடிலன் என்ப மன்னோ மே லைநாள் தவத்தின் என்றால்
பீடுறு தவமே யன்றி வலியது பறிதொன் றுண்டோ
489
கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் பசுங்காய் தூங்கித்
தள்ளரு நிலத்தாய் நின்ற மாவுருச் சாய்த லோடும்
உள்ளுறு சினம்மீக்  கொள்ல ஒல்ளைதொல் உருவம் எய்தி
வள்ளுறை உடைவாள் வாங்கி மலைவது கருதி ஆர்த்தான்

490
செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன்று உருமின் ஆர்த்துத்
து்ங்கமொடு  எதிர்த்து சீறும் சூர்உரம் கிழித்துப் பின்னும்
அங்கமது இருகூ றாக்கிஅலைகடல் வரைப்பில் வீிட்டி
எங்கணும் மறைகள் ஆர்ப்ப எஃகம்வான் போயிற் றம்மா

491
புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை யிடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி அருள்உருக் கொண்டு வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு  கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்தி வீற்றிருந்தது அவ்வேல்

492
தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீட
மேவலன் எழுநிது மீட்டும்  மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலு மாகிக் சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த் தொழில் கருதி வந்தான்

493
மணிகிளர் வரைய  தொன்றும் மரகதப் பிறங்கல் ஒன்றும்
துணையடி சிறகர் பெற்றுச் சூர்ப்புயல் அழி.ய ஆராத்துத்
திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவலோடு
பிணிமுக உருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்

494
ஆட்படு நெறியில் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந் துய்க்கத்
தசாட்படை மயூரமாகித் தன்னிகரில்லாச் சூரன்
காட்புடை உளத்தனாகிக் கடவுளர் இரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநாயகன் தன்முன்னம்


495
மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்கவன் இகலை நீக்கித்
தெருள்கெழு மனத்த னாகி நின்றனன் சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்

496
தீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதிஅடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்தான்

497
அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட உருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே யாகி
மிக்குயர் நமது தேரில் மேவினை ஆராத்தி என்னத்
தக்கதே பண்யி தென்னா எழுந்தது தமித்து விண்மேல்

498
செந்நிறம் கெழிஇய சூட்டுச் சேவலங் கொடி ஒன்றாகி
முன்னுறு மனத்தில் செல்லும்முரண்தரு தடம்தேர் மீப்போய்
இந்நில வரைப்பின் அண்டம் இடிபட உருமேறு உட்க
வந்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே
499
சீர்திகழ்  குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லைஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வுகொண்டு ஒழுகி நின்
சூர்திகழி மஞ்ஞை ஏறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரிஎன நடாத்தலுற்றான்

500
தடக்கடல்  உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடுப்பச் செந்தீ பதைபதைத்து ஒடுங்கச் சூறை
துடித்திட அண்டகூடம் துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரல ஆர்த்திட்டு ஏகிற்றுத் தோகை மஞ்ஞை

501
படத்தினில் உலகம்போற்றும் பணிக்கிறை பதைப்பப்பாங்கர்

அடுத்திடு புயங்கம் முற்றும் அவமர அவனி கேள்வன்
இடத்தமர் கின்ற பாம்பும் ஏங்குற விசும்பில் செல்லும்
உடற்குறை அரவும் உட்க உலாவிற்றுக் கலாப ணஞ்ஞை

502
பாரொடு விரிஞ்சன் தந்னைப் படைத்திடப் பல்நாள் மாயன்
கார்என வந்து முக்கட் கடவுளைப் பரித்ததே போல்
வீரருள் வீர னாகும் வேலுடைக் குமரன் தன்னைச்
சூர்உரு வாகி நின்ற தோகைமேற் கொம்ட தம்மா

503
வெயில்விடும் அநந்த கோடி வெய்யவர் திரண்டு ஒன்றாகி
புயல்தவவ் கடவுள் வானில் போந்திடு தன்மை யேபோல்
அயிலினை உடைய செவ்வேள் மரகதத்து அழகு சான்ற
மயிலிடை வைகி ஊர்ந்